இனி மறந்துக்கூட ஹோட்டலில் Tandoori roti ஆர்டர் செய்யாதீர்கள், அதிர்ச்சிகரமான தகவல்
அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும்போது, தந்தூரி ரொட்டியை ஆர்டர் செய்யாதீர்கள். இதற்குப் பின்னால் உள்ள பெரிய காரணம் உங்கள் உடல்நலத்துடன் தொடர்புடையது ஆகும்.
வடமாநில பண்டிகைகள் அல்லது திருமணங்கள் எதுவாக இருந்தாலும், தந்தூரில் சமைக்கப்படும் ரோட்டிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. ஏனென்றால் எந்த காய்கறியாக இருந்தாலும், அதை தந்தூரி ரொட்டியுடன் சாப்பிடுவது சுவையை இரட்டிப்பாக்குகிறது. ஆனால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு சுவையாக இருக்கிறதா? தந்தூரி ரோட்டியின் ஆச்சரியமான உண்மையை அறிவோம்.
தந்தூரி ரொட்டி செய்வது எப்படி என்று தெரியுமா?
ஒரு பாத்திரத்தில், மைதா (Maida), பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். பிறகு சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை நன்கு பிசைய வேண்டும். மாவு கையில் ஒட்டாதவரை நன்கு பிசைந்துக் கொள்ளுங்கள். மாவு கலவையை தயாரித்ததும் அதன் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தடவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த மாவினை சிறிது சிறிதாக உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல தேய்த்துக்கொள்ளுங்கள். அதன்பின் தவாவை சூடாக்கி, அதில் இந்த ரொட்டியை இருபுறமும் திருப்பிவிட்டு சமைக்க வேண்டும். இந்த ரொட்டியில் குமிழிகள் வர ஆரம்பித்தவுடன் மிதமான தீயில் நேரடியாக காட்டி ஒரு நிமிடம் சமைக்கவும். இரு பக்கங்களிலும் நெய் அல்லது வெண்ணெய் தடவி, அதன்மேல் கொத்தமல்லி மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்துக்கொள்ளவும்.
ALSO READ | Maida: மைதா உணவு உண்பதால் உங்களுக்கு ஏற்படும் தீமைகள் இவையே!
ஆரோக்கியத்திற்கு இத்தகைய தீங்கு
தந்தூரி ரோட்டி மைதாவால் தயாரிக்கபடுகிறது. மைதா என்பது பதப்படுத்தப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட கோதுமையைத் தவிர வேறில்லை. இது பென்சோல் பெராக்சைடுடன் மேலும் வெளுக்கப்படுகிறது, இது மாவுக்கு தூய வெள்ளை நிறத்தையும் மென்மையான அமைப்பையும் தருகிறது. இத்தகைய மாவு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மறுபுறம், நீங்கள் தொடர்ந்து மைதாவை உட்கொண்டால் நாள்பட்ட மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகள், ட்ரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
தந்தூரி ரொட்டியில் எத்தனை கலோரிகள்?
தந்தூரி ரொட்டியில் சுமார் 110 முதல் 150 கலோரிகள் உள்ளன, அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக சதவீத கலோரிகள் உள்ளன. ஒரு தந்தூரி ரொட்டி மொத்த தினசரி கலோரி தேவையின் 6% (2000 கலோரிகள்) வழங்குகிறது.
இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது
தந்தூரி ரோட்டியில் மைதா இருப்பதால், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் தந்தூரி ரொட்டி சாப்பிட விரும்பினால், கோதுமையில் செய்யப்பட்ட தந்தூரி ரொட்டியை உண்ணலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட தந்தூரி ரொட்டியை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் காண்பது மிகவும் அரிது. ஹோட்டல்களில் மைதா பயன்படுத்தும் தந்தூரி ரொட்டியே அதிகம்.
சர்க்கரை அளவை அதிகரிக்கும்
தந்தூரி ரோட்டியில் மைதா பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இது அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் தந்தூரி ரொட்டியை சாப்பிடுவது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
ALSO READ | Bizarre! டொமினோவின் nuts and bolts பீட்சா சாப்பிட்டதுண்டா? சாப்பிட்டவரின் எதிர்வினை இது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR