Maida: மைதா உணவு உண்பதால் உங்களுக்கு ஏற்படும் தீமைகள் இவையே!

நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு வகையில் மைதா உணவினை எடுத்துக்கொள்கிறோம். மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2021, 03:49 PM IST
Maida: மைதா உணவு உண்பதால் உங்களுக்கு ஏற்படும் தீமைகள் இவையே! title=

நாம் அனைவரும் தினமும் ஏதாவது ஒரு வகையில் மைதா உணவினை எடுத்துக்கொள்கிறோம். மைதா உணவு மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. மைதா மாவில் செய்யப்படும் அனைத்து பலகாரங்களும் நமக்கு தீங்கு விளைவிக்கிறது. இது நமது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது போன்று ஏராளமான தீமைகள் உள்ளன. அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

ரத்த சர்க்கரையின் அளவினை அதிகப்படுத்தும்
மைதா வகை உணவுகளில் (Food) அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் ரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும். 

செரிமான கோளாறு
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன.

ALSO READ | நன்றாக சாப்பிட்டாலும் ரொம்ம்ப சோர்வா இருக்கீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்…!!!

இருதய கோளாறு
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, ரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்

மலசிக்கல் பிரச்சினை ஏற்படுத்தும்
மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும். 

அல்சர் ஏற்படும்
மைதா உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுகிறவர்களுக்கு பெப்டிக் அல்சர், பித்தப்பைக்கல், சிறுநீரக கல் ,இருதய கோளாறு ,நீரிழிவு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நமது உடலில் (Health) 150 மில்லிகிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News