அடிக்கடி பட்ஸ் யூஸ் பண்றிங்களா? இந்த ஆபத்து வரலாம்!
அறிவியலின்படி, பொதுவாக காது மெழுகு நமது காதுக்குள் பூச்சி எதுவும் சென்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு தடுப்பானாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
காதுகளில் மஞ்சள் அல்லது அரக்கு நிறத்தில் ஒரு மெழுகு போன்ற பொருள் இருக்கும், அதனை சுத்தம் செய்ய சிலர் காட்டன் இயர் பட்ஸ்களை பயன்படுத்துவார்கள், அதுவே சிலர் கோழி இறக்கைகள், ஹேர் பின்கள், குச்சிகள், பென்சில் போன்ற ஏதேனும் சில கருவிகளையும் பயன்படுத்துவார்கள். நீண்ட காலமாகவே காது மெழுகுகளை சுத்தப்படுத்தலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் மக்களுக்குள் இருந்து வருகிறது. ஆனால் இதுபோன்ற கருவிகளை கொண்டு காதுகளை சுத்தம் செய்வது காதுகளுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காதில் இது போன்ற மெழுகு உருவாவது இயற்கையான ஒன்றாகும், அதனை நாம் செயற்கையாக வெளியேற்றுவது சரியல்ல. அறிவியலின்படி, பொதுவாக இந்த காது மெழுகு நமது காதுக்குள் பூச்சி எதுவும் சென்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க ஒரு தடுப்பானாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | திருமண வாழ்க்கையை குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
அதேசமயம் காதில் உருவாகும் மெழுகினால் அனைவருக்கும் நன்மையா என்றால் இல்லை, சிலருக்கு அந்த மெழுகை அகற்றவேண்டியது அவசியமானதாக இருக்கிறது. இதற்கு முதலில் நாம் காதின் அமைப்பை தெரிந்துகொள்ள வேண்டும், வெளிப்புற காது, நடுக்காது, உள்காது என மூன்று பகுதிகளாக காதை பிரிக்கலாம். வெளிப்புற செவியில் தோல்கள் வரிசையாக உள்ளது, இதில் செருமினஸ் சுரப்பிகள் உள்ளன. அவை தான் இந்த எண்ணெய் பொருள் போன்ற காது மெழுகுகளை உற்பத்தி செய்கின்றன, இந்த மெழுகு செவியின் மூன்றில் ஒரு பங்கு வெளிப்புறத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் தோலின் மேல் ஒரு அடுக்கை உருவாக்குகிறது. இந்த மெழுகுகள் தூசு, பூச்சி, நுண்ணியிரிகள் காதுக்குள் செல்வதை தடுக்கிறது. பொதுவாக நாம் மெல்லுவது, கடிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் அந்த மெழுகு வெளியேற்றப்படுகிறது.
இதனை சுத்தம் செய்ய நாம் காட்டன் இயர்பட்ஸ் போன்ற ஏதேனும் ஒன்றை பயன்படுத்தும்போது பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. சிலருக்கு இதனால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இவை காதுகளின் உள்பகுதியில் சில சமயம் பட்டு காத்து சுவர்கள் மற்றும் காது டிரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு காயத்தை ஏற்படுத்திவிடும். மேலும் காதுக்குள் காட்டன் இயர்பட்ஸ் விடுவதால் காதில் உள்ள மெழுகு வெளியேற வாய்ப்பில்லாமல் மேலும் உள்ளுக்குள்ளேயே சென்றுவிடுகிறது. ஏதேனும் மென்மையான பருத்தி துணியால் அதனை சுத்தம் செய்யலாம் அல்லது காத்து மூக்கு தொண்டை நிபுணர்களிடம் குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சென்று சென்று ஊசி மூலமாகவோ அல்லது ஏதேனும் மெழுகு நீக்க சிகிச்சை மூலமாகவோ இதனை சரிசெய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ