சர்க்கரை நோயை காட்டி கொடுக்கும் 2 முக்கிய அறிகுறிகள்
நீரிழிவு நோய் உங்களுக்கு உள்ளதா? என்பதை இந்த இரண்டு அறிகுறிகளை வைத்து ஓரளவுக்கு கணிக்க முடியும்.
உலகளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்காக உள்ளது. குறிப்பாக, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 50 விழுக்காடுக்கும் மேலான சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்சுலின் பற்றாக்குறையால் ஏற்படும் நீரிழிவு நோய் மற்ற நோய்களையும் ஏற்படுத்தும் காரணியாக இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பிற நோய்களுக்கு பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க | ஐஸ் போல் தொப்பை கொழுப்பு கரையுமா? அப்போ இந்த 7 பானங்கள் தான் ஒரே தீர்வு
கொரோனா காலத்திலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இறப்பை சந்திக்கின்றனர். இதனை தடுக்க முறையான வழிமுறைகள் எதுவும் இல்லை. பாரம்பரியம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களால் ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோய் தங்களுக்கு இருப்பதையே பலர் தாமதமாகவே அறிந்து கொள்கின்றனர். இதுவே அவர்கள் பல்வேறு உடல்நல சிக்கலால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
ஒரு சில அறிகுறிகளை வைத்து உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அந்த அறிகுறிகள் தென்படத் தொடங்கும்போதே மருத்துவமனைக்கு சென்று சர்க்கரை டெஸ்ட் செய்து, உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும்போது, சரியான வாழ்க்கை முறையில் பயணிக்கவும் இது உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | சைவ பிரியர்களுக்கான சிறந்த புரத உணவுகள்..! சிக்கன் - முட்டையை நினைக்க தேவையில்லை
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அதிகமாக வரும், சோர்வு ஏற்படும், தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகளும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், வாய் பகுதியில் ஏற்படும் அசாதாரண புண்கள், துர்நற்றம் ஆகியவையும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள். உங்கள் வாயில் அசாதாரணமாக துர்நாற்றம் வீசினால், உடனே பரிசோதனை செய்வது முக்கியம். சரியான நேரத்தில் சர்க்கரை நோயை கண்டறியாத ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் நோய்கள் உள்ளிடவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR