கொரோனா பரவல் அதிகரித்தாலும், ஒரு பக்கம் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது. மெதுவாக பல துறைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. எனவே கூடுதல் எச்சரிக்கை தேவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுத்தமாக இருப்பதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் தான், கொரோனாவில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கும்  சிறந்த வழி என்று கூறலாம்.


வெளியிடங்களுக்கு போக்கும் போது தொற்று பரவாமல் இருக்க, COVID-19 தொற்றிலிருந்து தப்பிக்க, நமது கைகளை அடிக்கடி, சோப்பு நீரினால் சுத்தம் செய்யுங்கள் அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைஸரை பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துகின்றனர்.


ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!


சானிடைசர் vs சோப்பு நீர் இதில் எதை பயன்படுத்தலாம் என பார்க்கும் போது, நிச்சயம் சானிடைஸர் தான் வசதியானது. ஏனென்றால், தண்ணீர் இல்லாத இடத்திலும் நாம் கைகளை சுத்தம் செய்து கொள்ள முடியும். ஆனால், சோப்பு நீர் தான் சானிடைஸரை விட சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அது கைகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதோடு, கைகளில் உள்ள அசுத்தம், பிசுக்கு ஆகியவற்றையும் போக்குகிறது.


சானிடைஸர் கொரோனா வைரஸை கொல்லும் என்றாலும், சருமத்தில் வியர்வை அல்லது ஈரம் இருந்தால், அது சனிடைஸரை நீர்த்து போக செய்வதால், அது திறன்பட செயல்படமால் போகும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


ALSO READ | தினமும் உணவில் வெங்காயம்..... சர்க்கரை நோய் சரியாகும்..!!!


அதோடு, சானிடைஸரில் உள்ள உட்பொருட்கள் சரியான அளவில் சேர்க்கபடவில்லை என்றாலும், அல்லது கலப்படம் உள்ள சானிடைஸர் என்றாலும் அது திறன்பட வேலை செய்யாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


அதை மனதில் வைத்து பார்க்கும் போது, குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு நீரினால் கைகளை கழுவது, தான் சிறந்த வழி என வல்லுநர்கள் நம்புகின்றனர்.


அதனால், நாம் நம்மை வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விலை உயர்ந்த சானிடைஸர்களை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் நாம் சானிடைஸர்களை பயன்படுத்தலாம். ஆனால், கைகளை சோப்பு நீரினால், கழுவும் வசதி இருந்தால், அதை பின்பற்றுவதே சிறந்த வழி. 


நாம் தும்மினாலோ, இருமினாலோ அல்லது சாப்பிடுவதற்கு முன்னர்,சமையல் செய்வதற்கு முன்னர், வீட்டிற்குள் வந்த உடன் என, இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகளை சோப்பு நீரினால் நன்றாக கழுவுங்கள்.