நரை முடியை தடுக்க உதவும் உணவுகள்: இளம் வயதிலேயே தலையில் நரை முடி தோன்ற ஆரம்பித்தால், அது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம். நரை முடிகள் நமக்கு அழைக்கப்படாத விருந்தாளிகள் போன்றது. இதன் காரணமாக, நரை முடி உங்களை வயதானவர் போல் தோற்றத்தை தருகிறது. முடியில் மெலனின் இல்லாததால் இத்தகைய நிலைமைகள் எழுகின்றன. வெள்ளை முடி மரபணு காரணங்களாலும் வரலாம். எனவே முடி நரைப்பதை தடுக்க இன்றிலிருந்து சில ஸ்பெஷல் டயட் எடுக்கத் தொடங்குங்கள். அந்த உணவுகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரை முடி வருவதற்கான சரியான காரணம் என்ன?
மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன. முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 முதல் 50 வயதுகளில் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.


மேலும் படிக்க | ஆண்மையை பெருக்கும் பிரண்டையில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ..!


கூந்தலுக்கு எந்த வைட்டமின்கள் தேவை
தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் பி6 மற்றும் பி12 முடியை ஆரோக்கியமாகவும், பட்டுப் போலவும் ஆக்குகிறது, மேலும் இயற்கையாகவே வெள்ளை முடியை கருமையாக்க உதவுகிறது. வைட்டமின் சி ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட், இது முடிக்கு நல்லது.


நரை முடியை தவிர்க்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்


1. கொண்டைக்கடலை Chickpeas
கொண்டைக்கடலை பொதுவாக சுண்டல் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, இது இந்தியாவின் பிரபலமான உணவாகும். கொண்டைக்கடலையில் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. ஒரு கப் கொண்டைக்கடலையில் 1,114 மைக்ரோகிராம் வைட்டமின் பி-9 உள்ளது, இது தினசரி தேவையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் (400 மைக்ரோகிராம்).


2. சிக்கன் Chicken
ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின் பி12 தேவை. இதற்கு கோழிக்கறியுடன் முட்டை, பால், சீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் டாப் லிஸ்டில் சிக்கன் அடிக்கடி சேர்க்கப்படும், ஆனால் குறைந்த பட்ச எண்ணெயில் சமைக்க வேண்டும், இல்லையெனில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடும்.


3. பருப்பு Lentils
தினமும் உண்ணும் பருப்புகளில் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. வைட்டமின் பி12 போன்று, பி9 டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உற்பத்திக்கு உதவுகிறது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் அவசியமானது மற்றும் முடியின் கருப்பு நிறத்தை பராமரிக்க முக்கியமான அமினோ அமிலமான மெத்தியோனைன்(Methionine) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.


4. ஸ்பைருலினா Spirulina
விலங்கு அல்லாத உணவுகளைப் பற்றி பேசுகையில், ஸ்பைருலினாவில் அதிக அளவு தாமிரம் காணப்படுகிறது. இது நம் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் பொடி பொதுவாக உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்பைருலினா இயற்கையாகவே மிதவெப்ப மண்டல காலநிலையில் உப்பு ஏரிகள் மற்றும் கடல்களில் வளரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Dengue Prevention: கொசுத்தொல்லை இனிமேல் இல்லை..டெங்கு கொசுக்களை விரட்டியடிக்க இதை ட்ரை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ