Dengue Prevention: கொசுத்தொல்லை இனிமேல் இல்லை..டெங்கு கொசுக்களை விரட்டியடிக்க இதை ட்ரை பண்ணுங்க!

National Dengue Day 2023: தேசிய டெங்கு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி அதிபயங்கர டெங்கு நோயை பரப்பும் டெங்கு கொசுக்களிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Yuvashree | Last Updated : May 16, 2023, 04:58 PM IST
  • டெங்கு பரவும் காலம் வந்துவிட்டது.
  • உங்களை டெங்கு கொசுக்களிடமிருந்து தற்காத்து கொள்ளுங்கள்.
  • டெங்கு கொசுக்களை விரட்ட சிம்பிள் டிப்ஸ்.
Dengue Prevention: கொசுத்தொல்லை இனிமேல் இல்லை..டெங்கு கொசுக்களை விரட்டியடிக்க இதை ட்ரை பண்ணுங்க! title=

முன்னரெல்லாம் மழைக்காலங்கள் வந்தால்தான் கொசுத்தொல்லைகள் அதிகமாக இருக்கும். ஆனால் இப்போது, ஆங்காங்கே சாக்கடைகளும் கழிவுநீர் கால்வாய்களும் பெருகிவிட்டதால் எல்லாக்காலத்திலும் குறிப்பிட்ட ஏரியாக்களில் கொசுத்தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பயங்கர நோயான டெங்கு பரவும் சீசன். எனவே, கொசுக்களை உங்கள் வீட்டிலிருந்து ஒழித்துக்கட்ட இதை முயற்சி செய்து பாருங்கள். 

கொசு விரட்டியை பயன்படுத்துங்கள்:

இந்த கொடூர கொசுக்களை விரட்டுவதற்காகவே பல பொருட்கள் கடைகளில் விற்கின்றன. கொசு பேட் முதல் ஓடோமாஸ் போன்ற கொசுவிரட்டி க்ரீம் வரை பலவகையான பொருட்கள் இதனுள் அடங்கும். ஆனால் அவற்றால் சில கெடுதல்களும் நேர்கின்றன. உதாரணத்திற்கு, கொசுக்களை விரட்ட நாம் அடிக்கடி க்ரீம் தடவினால் சிலருக்கு அது சருமத்தில் ஏதாவது பிரச்சனையை உண்டு பன்னும். கொசு வத்தியின் வாசனை ஒரு சிலருக்கு தும்மல், சுவாச பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே இது போன்ற பொருட்களை கையாள்கையில் கவனம் தேவை. 

காெசு வலையை பயன்படுத்துங்கள்:

கொசுக்களில் இருந்து நம்மை பாதுகாப்பதில் கொசு வலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இவற்றை வாங்கும் போது விலை குறைவாக இருக்கிறது என மட்டமான வலையை வாங்கி விடக் கூடாது. நல்ல திடமான எளிதில் கிழியாத கொசு வலைகளாக பார்த்து வாங்க வேண்டும். 

மேலும் படிக்க | RuPay கார்டில் பணம் செலுத்த இனி CVV தேவையில்லை... எப்படி தெரியுமா?

எந்த வகையான உடையை உடுத்துவது:

வெயில் காலத்தில் கருப்பு உடை அணிந்தால் உடல் சூடு அதிகரிக்கும் என்ற கூற்று ஒன்று உள்ளது. இது உண்மைதான். கருப்பு, சூட்டை அதிகமாக ஈர்க்கும். இதே போலத்தான் கொசுவும். கருப்பு உடை அணிந்தால் அதிகமாக கொசுக்கடிக்கும் என்பார்கள். ஆகவே, தூங்கும் போது மெல்லிய நிறமுள்ள உடைகளை உடுத்திக்கொண்டு தூங்குங்கள்.

கொசுக்களை விரட்ட வீட்டு ரெமிடி:

ஒரு கப்பில் எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதில் கிராம்பின் பாதியை நட்டு வையுங்கள். கிராம்பின் வாசனைக்கும் எலுமிச்சையின் வாசனைக்கும் கொசு உங்கள் வீட்டு பக்கம் தலை வைத்தே படுக்காது. உங்கள் வீட்டில் எத்தனை அறை இருக்கிறதோ அத்தனை அறையிலும் இதை வையுங்கள். இதன் சக்தி 3-4 மணி நேரம் வரை நீடிக்கும். ஒரே பழத்தை தினமும் வைக்கக்கூடாது. இதை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

இயற்கை கொசுவிரட்டி:

கொசுவத்தி உங்கள் வீட்டில் உள்ள கொசுவை விரட்டவில்லை என்றால், கவலை வேண்டாம். இந்த இயற்கை கொசுவிரட்டியை உபயாேகித்து கொசுக்களை துவம்சம் செய்யுங்கள்.

வீட்டில் உபயோகப்படுத்தாத மண்சட்டி இருந்தால் அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
மாலை நேரங்களில் இந்த மண்சட்டியில் தேங்காய் சிரட்டை மற்றும் கற்பூரம் ஆகியவற்றை எரிய வையுங்கள்.
இதனுடன் நொச்சி இலைகளை சேருங்கள். இப்போது அந்த சட்டியிலிருந்து புகை வரும். 
மண்சட்டியில் இருந்து வரும் புகையை வீடு முழுவதும் காட்ட வேண்டும். 
இதை செய்யும் போது ஜன்னல் கதவுகள் மூடிதான் இருக்க வேண்டும். இல்லையென்றால் புகை வெளியே சென்றுவிடும். புகைப்போட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. 
மேற்கூறியது போல சுவாசப்பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும். 

பூண்டு கொசுக்களையும் விரட்டுமா? 

உடலில் உள்ள நோய்களை மட்டுமல்ல கொசுக்களை விரட்டவும் மிகவும் உபயோகரமாக இருக்கும் ஒரு உணவுப்பொருள், பூண்டு. 

பூண்டை நன்றாக நசுக்கி அதன் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வையுங்கள்.
அதை ஸ்ப்ரே செய்ய பயன்படுத்தும் பாட்டிலில் ஊற்றி கொசு இருக்கும் மூலைகளில் அடித்து கொசுக்களை விரட்டலாம். 

மேலும் படிக்க | ரயில்வேயின் அதிரடி சலுகை! ஏசி கோச்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News