கண் பார்வை குறைபாடுகள் தீர்க்கும் வழி!!
கண்கள் நமது உடலின் மிக மென்மையான உறுப்பு ஆகும். நம் கண்கள் காமராவை போன்ற செயல்பாடு செய்கிறது. உலகத்தை அழகாக்கி காட்டும் ஆற்றலை கொண்டது கண்கள். கண் பார்வை இல்லாமல் இருப்பதை நாம் கனவில் கூட நினைது பார்க்க முடியாது கண்கள் அவ்வளவு முக்கியமானது.
கண்களை பாதுகாப்பது எப்படி பார்ப்போம்:
வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், ரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு, கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத்தக்காளி, பசும் பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் கண்களை பாதுகாக்கலாம்.
கண் குறைபாடு வகைகள்:
* இரட்டை அல்லது இரட்டை பார்வை சோதம்
* மங்கலான அல்லது பனி படர்ந்த பார்வை
* வீக்கம், சிவப்பான கண்கள்
* கிட்டப்பார்வை (மோபியா)
* தூரப்பார்வை (ஹைபர் மோபியா)
* கோணல் பார்வை (அஸ்டிக்மாடிசம்)
* வெள்ளெழுத்து (ப்றேச்பயோபியா)
* கார்னியா சிதைவு
* கண் புரை (காடராக்ட்)