ஆண்களின் கவனத்திற்கு: தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்கள்!!
ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சில ரகசிய குறிப்புகள்!
ஆண்களுக்கு இருக்கும் அழகுப் பிரச்னைகளில் மிக முக்கியமானது வழுக்கை தான். வழுக்கைக்கு மரபணுக்கள் தான் காரணம் என்றால் அதை சரிசெய்ய கொஞ்சம் கடினமானது
நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ, அப்படித்தான் வழுக்கையும்.ஆண்களின் வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது.
>எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.
>மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகம் ஆகியவை காரணமாக இருந்தால் அவற்றை சில இயற்கை வழிகள் மூலம் அவற்றை சரிசெய்துவிட முடியும்.
>பட்டையில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி- ஆக்சிடண்ட்கள் மற்றும் இதர உட்பொருட்கள் ஸ்கால்ப்பில் உட்சென்று தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டிவிடுகிறது.
>தத்தூர என்ற ஊமத்தை விஷத்தன்மை கொண்டது. எனவே விரல் நுனிகளால் எண்ணெயைத் தொட்டுத் தடவிய பிறகு கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம்.
ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்கிறது. தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறது. இது வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
>கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றை வாணலியில் போட்டு வறுத்து, நல்ல கருநிறம் அடைந்தவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்க்கலாம். நன்றாக முடி வளரும்.