முளைகட்டிய பயறுகளின் நன்மைகள்: முளைகட்டிய பயறுகள் ஒரு அற்புதமான சூப்பர்ஃபுட்டாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். காலையில் காலை உணவாக முளைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று உணவியல் நிபுணர்கள் கருதுகொறார்கள். அவை உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, பல ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளையும் நீக்குகின்றன. முளைகட்டிய பயறுகள் முளைத்த தானியங்களாகும். இவற்றில் அதிக சத்து உள்ளது. இவை நமது உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக உண்ணப்படும் முளைகளில் பீன்ஸ் மற்றும் பருப்பு முளைகள் அடங்கும். நம்மில் பலர் ஒரே நேரத்தில் பல முளைகட்டிய பயறுகளை உட்கொள்கிறோம். கருப்பு பீன்ஸ், சோயாபீன், தினை, பக்வீட், பயறு, பச்சைப்பயறு, பார்லி, காராமணி, கொண்டைக்கடலை என இவை அனைத்தும் முளைகளாகவும் உண்ணப்படுகின்றன. நமது தினசரி உணவில் முளைகளைச் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் அண்ட விடாமல் தடுக்கும்.  


முளைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தி: 


நமது உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு பல ஊட்டச்சத்துக்கள் தேவை. அவை முளைகட்டிய பயறுகளின் மூலம் எளிதில் கிடைக்கும். முளைகள் உடலை வலுப்படுத்துவதோடு, பல்வேறு உறுப்புகளின் செயல்பாடுகளுக்கும் பங்களிக்கின்றன. அவை நோயை எதிர்த்துப் போராட நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.


மேலும் படிக்க | Ayurvedic Herb: சிறுநீரக பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் அஷ்வகந்தா & நெருஞ்சி! 


கொலஸ்ட்ராலை நிர்வகிக்கிறது: 


ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முளைகளில் அதிக அளவில் உள்ளன. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் தேவை உள்ளவர்களுக்கு இது பயனளிக்கும்.


கண்களுக்கு நல்லது: 


முளைகளில் வைட்டமின் ஏ உள்ளது. தொடர்ந்து முளைகட்டிய பயறுகளை உட்கொண்டு வந்தால், அது காலப்போக்கில் நமது கண்பார்வையை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.


எடை இழப்புக்கு உதவும்: 


முளைகட்டிய பயறுகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதுவே முளைகள் நமது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள கலோரிகளின் அளவும் குறைவு. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சூப்பர்ஃபுட்டாக உதவும்.
 
வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம்: 


முளைகளில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இது நமது வயிற்றில் pH அளவை சீராக வைத்து அமிலத்தன்மையைக் குறைக்கிறது.


கூந்தலுக்கு நன்மை பயக்கும்: 


பொடுகு மற்றும் இளநரை பிரச்சனையை நீக்க முளைகட்டிய பயறுகள் உதவியாக இருக்கும். இது கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.


மேலும் படிக்க | மாதவிடாய் நிறுத்தம் போல் ஆண்களுக்கும் ஏற்படும்... எதனால் வருகிறது தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ