மாதவிடாய் நிறுத்தம் போல் ஆண்களுக்கும் ஏற்படும்... எதனால் வருகிறது தெரியுமா?

Male Menopause: பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஏற்படும் மாதவிடாய் நிறுத்தத்தை போன்று, ஆண்களுக்கு இனப்பெருக்க சுழற்சியில் ஏற்படும் வீழ்ச்சி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 3, 2023, 02:04 PM IST
  • இதனால், ஆண்களின் பாலியல் வாழ்வில் சுணக்கத்தை ஏற்படுத்தும்.
  • பெண்களை போன்று சில ஆண்களுக்கும் சில மாற்றங்கள் ஏற்படும்.
  • அறிகுறிகள் மிக மெதுவாகவே வெளியே தெரியும்.
மாதவிடாய் நிறுத்தம் போல் ஆண்களுக்கும் ஏற்படும்... எதனால் வருகிறது தெரியுமா? title=

Male Menopause: பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்தை (Menopause) இனப்பெருக்க சுழற்சியின் முடிவாக குறிக்கப்படுகிறது. இனப்பெருக்க ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படும். மாதவிடாய் நின்றவுடன் ஒரு பெண், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியான பல மாற்றங்களை சந்திக்க நேரிடுகிறது.

பெண்களின் மாதவிடாய் நிறுத்தம் போன்றே, ஆண்களுக்கும் இனப்பெருக்க சுழற்சியில் நிறுத்தம் போன்ற நிகழ்வை விஞ்ஞானம் அவதானித்துள்ளனர். அங்கு இனப்பெருக்க செயல்பாட்டில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதை குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெண்களைப் போலவே, 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சில ஆண்களும் தங்கள் இனப்பெருக்க ஹார்மோனின் டெஸ்டோஸ்டிரோனில் சரிவு அல்லது வீழ்ச்சியைக் காண்கின்றனர். இது வயது அதிகமாவதால் ஏற்படுகிறது. இந்த நிலை பெரும்பாலும் ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் செயலை மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புபடுத்துவது சரியாக இருக்காது என்பதால், ஆண்ட்ரோபாஸ் என்ற இந்த வார்த்தையை தவறாக பயன்பாடு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | அதிகமா எடை ஏறுதா? அதிரடியா குறைக்கலாம்.. இந்த உப்பு பயன்படுத்துங்க போதும்!!

பாலியல் வாழ்வில்...

ஆண்ட்ரோஜன் குறைவை பெண்களின் மாதவிடாய் நிறுத்தத்துடன் ஒப்பிடுவதில் வல்லுநர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். ஏனெனில் இது பெண்களை போல அனைத்து வயது வந்த ஆணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும் மாதவிடாய் நிறுத்தம் போல் அல்ல இது. இரண்டாவதாக, பெண்களைப் போலல்லாமல், இது விந்தணு உற்பத்தி போன்ற ஒரு ஆணின் இனப்பெருக்க செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்தாது. இருப்பினும், ஒரு மனிதனின் பாலியல் வாழ்க்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, சில சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ஆண் இனப்பெருக்க உறுப்புகள் வயதானதால், செயல்பாட்டை இழக்கும்போது பெரும்பாலான வல்லுநர்கள் இந்த நிலைக்கு ஹைபோகோனாடிசம் (Hypogodanism) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்ட ஆண்கள் மெதுவாக அறிகுறிகளை காண்பார்கள் மற்றும் பெண்களிடம் காணப்படுவது போல் பெரியளவில் அறிகுறிகள் இருக்காது. பெண்களைப் போலவே, அறிகுறிகள் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், உணர்ச்சிகரமானதாகவும் இருக்கலாம். அதாவது மனநிலை மாற்றங்கள், வியர்த்தல் மற்றும் பிற அறிகுறிகளை சொல்லாம்.

காரணிகள்

ஆய்வுகள் 'ஆண் மாதவிடாய்' என்ற கருத்தை ஒரு சிக்கலான கருத்து என்று அழைக்கிறது. அது முற்றிலும் உண்மையாக இருக்காது என்றே கூறுகிறன்றனர். வயதானதைத் தவிர, மது அருந்துதல், புகைபிடித்தல், பதற்றம், இதய நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற போன்ற பல காரணிகள் டெஸ்டோஸ்டிரோன் குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Belly Fat Burn: செலவே இல்லாம ஜிம்முக்கு போகாமா ஒல்லியாக ஈஸி டெக்னிக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News