பலருக்கு, தினமும் பல மணி நேரம் நாற்காலியில் லேப்டாப்புடன் அமர்ந்து வேலை செய்யும் டெஸ்க் வேலை இருக்கும். இதனால் முதுகு வலி, இடுப்பு வலி என பல வலிகள் ஏற்படலாம். அது மட்டுமன்றி, இது உடலுக்கு பெரிதும் உடல் உழைப்பு கொடுக்காத வேலை என்பதால், சைலண்ட் கில்லராக இருக்கும் பல நோய்களும் உங்களை தாக்கலாம். வேலை அலுவலக நேரத்தில் நம்மால் பெரிதாக உடல் உழைப்பு கொடுக்க முடியாது என்பதால், நாம் நமது தினசரி பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிற்பதால் கிடைக்கும் நன்மைகள்:


நம் முழு உடல் நலனில் கவனம் செலுத்துவதற்கும், நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கும் நாம் தினசரி உடற்பயிற்சி செய்வது உதவும். நிற்பதால், ஒருவருக்கு பலவித நன்மைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் பலர் கூறுகின்றனர். நமது தோரணையை சரி செய்வது, கொழுப்பை உடலில் ஏறாமல் தடுப்பது, நோய் பாதிப்புகளை தடுப்பது என பல்வேறு நன்மைகள் காத்திருக்கின்றனர்.


எவ்வளவு நேரம் நிற்க வேண்டும்?


நிற்பது குறித்து பேசும் ஆரோக்கிய நிபுணர்கள், நிற்பதால் ஏற்படும் மகத்துவங்கள் , உடலுக்கு பல்வேறு நலன்களை கொடுக்கும் என கூறுகின்றனர். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், டைட் 2 நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள், ஒரு சில புற்றுநோய் பாதிப்புகளை கூட, நிற்கும் பயிற்சி குறைக்கும் என கூறுகின்றனர். 


நாம் எவ்வளவு மணி நேரம் நிற்க வேண்டும் என்பது, நமது உடல் எடை குறித்து முடிவு செய்யப்படும். பொதுவாக ஒரு நாளில் 30 முதல் 1 மணி நேரம் வரை நிற்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை, நாம் வேலை செய்து கொண்டே இருக்கும் போதும், வீட்டில் எதுவும் செய்யாமல் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் செய்யலாம். ஒரு சில அலுவலகங்களில் நின்று கொண்டே வேலை பார்ப்பது போன்ற மேடைகள் அல்லது டேபிள்கள் போடப்பட்டிருக்கும். இதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு நாளில் பல மணி நேரங்கள் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள், இதை செய்யலாம். 


மேலும் படிக்க | தினமும் முலாம் பழ விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


ரேக் எடுக்காமல் பல மணி நேரங்கள் நிற்பதாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். கால்வலி, முட்டி வலி, தசை பிடிப்பு, மூட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகலாம். அதனால், உங்களுக்கு நிற்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ, அதை முதலில் அதற்கு கவனம் செலுத்து வேண்டும். அப்படி வலி ஏற்பட்டால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். 


நிற்பதுடன் சேர்ந்து, தினசரி சரியான உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஆனால், ஹெவி வர்க்-அவ்ட்டாக இல்லாமல் லைட்டாக வர்க்-அவுட் செய்ய வேண்டும். நிற்க முடியவில்லை என்றாலும் 3 முதல் 5 நிமிடங்களுக்கு வேகமாக நடைப்பயிற்சி செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு 2 முறை நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் உடலில் க்ளூகோஸ் அதிகரிக்கும். நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேலை செய்பவர்கள், கண்டிப்பாக தங்களுக்கான உடற்பயிற்சி ரொட்டீனை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமாகும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ