சர்க்கரை நோய் உள்ளவர்களும்,  உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கும், சர்க்கரைக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவது மிகவும் பலன் தரும். இதன் மூலம் சர்க்கரை உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்துவதும் எளிது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் இல்லாவிட்டாலும் கூட, சர்க்கரையை குறைத்துக் கொண்டு, ஆரோக்கியமான சர்க்கரைக்கு மாற்றான சில சர்க்கரைகளை பயன்படுத்தினால், நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ முடியும். அதிக கலோரி கொண்ட சர்க்கரை அதிகப்படியான ஆற்றலை கொடுக்கிறது. சர்க்கரையும் அதன் பிற வகை உணவுகளும் உடனடி ஆற்றல்கொடுக்கக் கூடியது. சர்க்கரை கொடுக்கும் அதீத ஆற்றலை பயன்படுத்தாதபோது, அதனால் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, உடல் பருமன அதிகரிக்கிறது. சர்க்கரையை தவிர்ப்பது என்பது உடல் பருமனை குறைக்க ஒரு சிறந்த வழி. உலகில் எடை மிக விரைவாக குறையும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனித்துளசி:


ஸ்டீவியா எனப்படும் இனிப்பு சீனித்துளசி இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இனிப்புத் துளசி அல்லது சீனித் துளசி என்று பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் ஸ்டீவியா (Stevia) எனப்படும்.  இது பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பொடி காபி, டீ மற்றும் சோடாக்கள் போன்ற பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம் என்பதால், மிக சிறிய அளவில் சேர்த்தாலே போதுமானது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது 'இரத்த சர்க்கரை', இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகளைக் குணப்படுத்தும்.


ஸ்டீவியா பொதுவாக செயற்கை இனிப்புகளில் காணப்படும் இரசாயனங்கள் மற்றும் சேர்க்கைகள் இல்லாததன் காரணமாக,  நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. அதன் இயற்கையான தோற்றம் செயற்கை மாற்றுகளின் சாத்தியமான பக்க விளைவுகளைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது.  


இனிப்புத் துளசி இலைகளில் இயற்கையாகவே இனிப்புச் சுவை உள்ளது. இனிப்பு துளசியில் உள்ள இனிப்புச் சுவையில் கலோரிகள் இல்லை என்பது அதன் சிறப்பு தன்மை. அதனால், இதனை கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.


மேலும் படிக்க | உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க.... உணவுகளும் பழக்கங்களும்.!


சீனி துளசியில் உள்ள ஸ்டீவியோசைடு, ரெபாடையோசைடு போன்ற வேதிப்பொருள்கள் தான் இதன் இனிப்புக்கு முக்கியக் காரணங்கள். வணிக ரீதியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கும் ஸ்டீவியாவில் மற்ற இனிப்புகளை கலக்கலாம், எனவே எப்போதும் லேபிளைப் படித்து வாங்கவும். எடை இழப்புக்கு உதவும் குறைந்த கலோரி கொண்ட இயற்கை இனிப்பானாக, ஸ்டீவியா மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், ஸ்டீவியாவுடன் கூடிய இனிப்பு மற்றும் பானங்களை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தாது. சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை, நன்றாக குறையும். பொதுவாக பலருக்கு சர்க்கரை பழக்கத்தை கைவிடுவது எளிதல்ல. அதற்கு மேற்சொன்ன சர்க்கரைக்கு மாற்றான பொருட்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க |  இரண்டு மறை பல் தேய்த்தும் மஞ்சள் கறை போகவில்லையா... இதை செய்து பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ