கழிவறை காட்டிக் கொடுக்கும் கல்லீரல் பாதிப்புகள்! மலம் காட்டும் அறிகுறிகள்
Liver Health: கல்லீரல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் மலத்திலும் தென்படலாம், காலையில் எழுந்தவுடன் கழிவறைக்கு செல்லும் போது இந்த வித்தியாசம் இருந்தால் கவனமாய் இருங்கள்
காலையில் கழிப்பறையில் கவனமாக இருந்தால், உடலில் ஏதேனும் நோய் இருந்தால் அதற்கான அறிகுறிகளை தெரிந்துக் கொள்ளலாம். சில அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும் சில சமயங்களில் கல்லீரல் பாதிப்பு போன்ற மோசமான நோய்களின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால் எந்தவொரு மாற்றத்தையும் அலட்சியம் செய்யக்கூடாது.
கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்
நம் உடல் பல சமிக்ஞைகள் மூலம் உடல் ஆரோக்கியத்தை காட்டுகிறது. அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், பல பெரிய நோய்களின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். கல்லீரலும் நம் உடலின் ஒரு உறுப்பு, அதில் ஏற்படும் பிரச்சனைகள் உடலின் பல உறுப்புகளை பாதிக்கும். கல்லீரல் சரியாக செயல்படுவதை நிறுத்தும்போது, தோல் மற்றும் கண்கள் உட்பட உடலின் பல பாகங்களில் அறிகுறிகள் காணப்படுகின்றன.
மலத்தில் கல்லீரல் பாதிப்பு அறிகுறிகள்
அதேபோல மலத்தில் ஏற்படும் சில மாற்றங்களும் உங்கள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம், மலத்தில் தோன்றும் அறிகுறிகளை அலட்சியமாக இருக்க வேண்டாம். மலத்தில் காணக்கூடிய கல்லீரல் தொடர்பான அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | பசியை அடக்க முடியல.. ஆனால் வெயிட் குறையணுமா? இதோ உங்களுக்கான 'டயட் ஸ்னாக்ஸ்'
பசையான மலம்
கல்லீரல் சரியாக செயல்படாதபோது, செரிமான செயல்முறையும் இதனால் பாதிக்கப்படும். செரிமானத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டால், மலத்தில் பசைத்தன்மை காணப்படும். ஏனெனில் சளி போன்ற ஒரு பொருள் மலத்தில் வெளியேறத் தொடங்குகிறது மற்றும் இது கல்லீரல் தொடர்பான பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
களிமண் நிற மலம்
கல்லீரல் தொடர்பான நோய்களில், மலத்தின் நிறம் களிமண் போல மாறும், வழக்கமான நிறத்தில் இருந்து மலத்தின் நிறம் மாறினால், அதை கண்காணிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
மலத்தில் துர்நாற்றம்
உங்கள் மலத்தின் வாசனையில் வித்தியாசம் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மலத்தில் இருந்து வரும் வாசனை சாதாரணமானது அல்ல என்பதை அடையாளம் கண்டால் மட்டுமே அது கவலைக்குரியது. அதிலும் துர்நாற்றம் அதிகமானால் மருத்துவரை அணுகுங்கள்.
மேலும் படிக்க | ஓவரா எடை ஏறுதா? உடனடியா குறைக்க இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க
மலமும் பேதியும்
வயிற்றுப்போக்கு மற்றும் திடீரென மலம் தளர்வாக மாறுவது என்பது பல்வேறு நோய்களைக் குறிக்கிறது. கல்லீரல் பாதித்தால், செரிமான செயல்முறை பாதிக்கப்படுகிறது, இதன் காரணமாக மலம் மெல்லியதாகிறது. அத்தகைய அறிகுறிகள் இருந்தால், நிச்சயமாக உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள் கலந்த மலம்
கல்லீரல் தொடர்பான நோய்களில், தோல் மஞ்சள் நிறமாகவும், கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறுவது போன்ற அறிகுறிகளைக் காணலாம். மலத்தில் மஞ்சள் நிறமும் காணப்படலாம், இது முதல் அறிகுறியாக இருக்கலாம். மலத்தின் நிறம் மிகவும் மஞ்சள் நிறமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கீல்வாதம், மூட்டுவலி, யூரிக் அமில பாதிப்பா? உருளைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் நல்லது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ