கீல்வாதம், மூட்டுவலி, யூரிக் அமில பாதிப்பா? உருளைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் நல்லது

Vegetable To Control Uric Acid: நோய்கள் அண்டாமல் அரணாக காக்கும் காய்கறிகள்... யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் காய்கறிகளின் பட்டியலில் உருளைக்கும் சேனைக்கிழங்கிற்கும் இடம் உண்டு... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 28, 2023, 06:48 AM IST
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கனிகள்
  • உணவே மருந்து, உணவே நோயையும் உருவாக்கும்
  • ப்யூரினை கட்டுப்படுத்தும் காய்கறிகள்
கீல்வாதம், மூட்டுவலி, யூரிக் அமில பாதிப்பா? உருளைக்கிழங்கும் சேனைக்கிழங்கும் நல்லது title=

மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றும் இந்த 5 காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், வலி ​​நிவாரணி தேவையே இருக்காது. உடலில் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உணவே மருந்தாக இருக்கும். அதில் காய்கறிகள் மூலம் யூரிக் அமில அளவை எப்படி குறைக்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். யூரிக் அமிலம் என்பது உடலின் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும் ஒரு நோயாகும். உடலில் பியூரின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது அதிக யூரிக் அமிலத்தின் பிரச்சனை ஏற்படுகிறது.

அதிகரிக்கும் யூரிக் அமிலம், உப்பு போன்று இரத்தத்தில் உருவாகத் தொடங்குகின்றன, அவை மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்களில் குவியத் தொடங்கும். அந்த படிகங்கள், மூட்டு இயங்கும்போது திசுக்களை வேகமாக துளைக்கத் தொடங்குகின்றன, இதனால் கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த வலியை சமாளிக்க வலி நிவாரணி மருந்துகள் தேவைப்படும்,

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே நிவாரணம் அளிக்கும். எனவே, யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் இயற்கை வழிகளை பலரும் நாடுகின்றனர். அவற்றை தினசரி உணவில் உட்கொண்டு வந்தால், உடலில் உருவாகும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும், இதனால் வலி நிவாரணிகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்க வந்துவிட்டது குளிர்கால கீரை! பியூரின் குறைவான பதுவா கீரை

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ப்ரோக்கோலி
யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்க்க வேண்டும், இதில் பியூரின் மிகக் குறைந்த அளவு உள்ளது என்பதோடு, வேறு பல சிறப்பு ஊட்டச்சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் உள்ளே சென்ற பிறகு, மூட்டுகளில் படிகத்தை உருவாக்கும் செயல்முறையை நிறுத்துகிறது, இது மூட்டுகளில் கடுமையான வலியைக் குறைக்க உதவுகிறது.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் வெள்ளரி
சீசன் எதுவாக இருந்தாலும், வெள்ளரியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள வெள்ளரி, யூரிக் அமில அளவைக் குறைக்கிறது. அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க, வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இது வலியைக் குறைக்க உதவும்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் சேனைக்கிழங்கு
இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்க சேனைக்கிழங்கு பெரிதும் உதவும். நார்ச்சத்து நிறைந்த சேனையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை, பியூரின்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த காய்கறி யூரிக் அமிலத்தைக் குறைப்பதோடு வேறுபல நன்மைகளையும் அளிக்கும்.

மேலும் படிக்க | டெங்கு காய்ச்சலுக்கு மட்டுமல்ல, ரத்த சர்க்கரை & உடல் பருமனுக்கும் பப்பாளி இலை ஜூஸ்

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் உருளைக்கிழங்கு
உடலில் உருவாகும் அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க, பல்வேறு வகையான காய்கறிகள் பயன் தரும், அவற்றில் ஒன்று உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொள்வதை யாரும் அறிவுறுத்துவதில்லை, ஆனால் யூரிக் அமில அளவைக் குறைக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, உருளைக்கிழங்கை உட்கொண்டால் யூரிக் ஆசிட் அளவு குறையும்.

யூரிக் அமிலத்தை குறைக்கும் கேரட்
கேரட்டில் எக்கச்சக்கமான நோய் தீர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கேரட்டை வேகவைத்தோ அல்லது சாலட் வடிவில் உட்கொண்டால், அது யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதோடு வேறு பல நோய்கள் அண்டாமல் அரணாக காக்கும்

(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பீட்ரூட் கீரையை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்தால், யூரிக் அமில பிரச்சனை காலி...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News