காபி: சுவைத்தால் ருசி ஆனால் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும்
Black Side Of Coffee: காபி சுவைத்தால் ருசியானது என்றாலும், ஆரோக்கியத்தை பதம் பார்க்கும் என்பது தெரியுமா?
Black Side Of Coffee: காஃபியை குடிப்பதற்காக ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அதை ஏன் விடவேண்டும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. காபியை கைவிடுவது என்பது உங்களுக்கு நீங்களே கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாக இருக்கும். நீங்கள் உடனடியாக காபி குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள் தெரிந்தாலும் அவற்றில் முக்கியமான 5 காரணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள். மன நிம்மதிக்கு காபியை விடுவது மிகவும் அவசியமானது என்பதை புரிந்துக் கொள்வீர்கள்.
உலகெங்கிலும் உள்ள பலரும் காபி குடிக்காவிட்டால் அந்த நாளே சரியானதாக இருக்காது என்று நினைக்கின்றனர். காபி உட்கொள்வதால், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும், உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படும், உடல் எடை குறையும் என பல நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும்.
ஒருவர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 400 மில்லிகிராம் காபி குடிக்கலாம். ஆனால் டீ, சாக்லேட், காபி என பலவற்றில் காஃபின் உள்ளது, எனவே உடலுக்கு தேவையானதைவிட, அதிகமாக காஃபின் அளவு உட்செல்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்க: எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்
உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது உங்கள் கரோனரி தமனிகளில் இரத்த ஓட்டத்தை அதிக காபி நுகர்வு குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. உடற்பயிற்சியின் போது, படபடப்பு அல்லது இதயத் துடிப்பு சீரற்று போகலாம், காலப்போக்கில் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற வாய்ப்பும் காபி குடிப்பவர்களுக்கு இருக்கிறது.
தூக்கத்தை கெடுக்கிறது
ஒரு நாளைக்கு மூன்று கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு தூக்கம் குறைவாக இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. காஃபினேட்டட் பானங்கள் குடிக்காதவர்கள் மற்றும் அதிக அளவில் காபி குடிப்பவர்களுக்கு இடையே 79 நிமிட தூக்க வித்தியாசம் இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. தூங்குவதற்கு சிரமப்படுபவர்கள் கண்டிப்பாக காபி குடிக்க வேண்டாம்.
சர்க்கரை நுகர்வு அதிகரிக்கும்
நாம் காபியில் சர்க்கரையைச் சேர்க்காமல் குடித்தலும், காபியுடன் பிஸ்கட் போன்ற நொறுக்கு தீனிகளை உண்கிறோம். அது சர்க்கரை நுகர்வை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க இந்த ஸ்பெஷல் காபியை குடியுங்கள்
மனநிலையை மோசமாக்கும்
காஃபின் அட்ரினலின் போன்ற கேடகோலமைன்களை அதிகரிக்கிறது. காஃபின் அதிக அளவில் பதற்றத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தலாம்.
கருவுறுதலை பாதிக்கலாம்
ஒரு நாளைக்கு ஐந்து கப் காபிக்கு மேல் குடிப்பவர்களுக்கு குழந்தை பெறும் தன்மை குறையலாம். கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் காபியைக் குறைப்பது நல்லது. கர்ப்பிணிகள் காபி அருந்துவதை முழுவதுமாக கைவிட வேண்டும் அல்லது நிச்சயமாக ஒரு நாளைக்கு 200 மி.கி.க்கு குறைவாக குடிக்க வேண்டும், ஏனெனில் கரு வளர்ச்சியை அதிக அளவு காபி நுகர்வு பாதிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ