சுவைக்கு மட்டுமா சேப்பங்கிழங்கு? ஆரோக்கியத்திற்கும் அடைக்கலம் தரும் சேம்பு கிழங்கு
பார்ப்பதற்கு ஏப்ப சாப்பையாக இருந்தால் என்ன? டேஸ்டிலயும் சரி, ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் நான் தான் மாஸ் என்று சொல்லும் கிழங்கு! இது சேப்பங்கிழங்கின் ஆரோக்கியக் கதை...
மக்களின் உணவுப் பழக்கமே, அவர்களின் ஆரோக்கியத்தின் ஆணிவேராக இருக்கிறது. பொதுவாக, இன்றைய காலகட்டத்தில் தாறுமாறான உணவுப் பழக்கத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியத்தை குலைக்கும் நோய்களில் முக்கியமானது இதயம் மற்றும் வயிறு பிரச்சனைகள். ஆனால் கையில் ஏந்தும் கத்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம் என்பது போல, நாம் உண்ணும் உணவே நமது உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கிறது.
இதயம் மற்றும் வயிற்று பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும் காய்கறிகளில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது சேப்பங்கிழங்கு.
பார்ப்பதற்கு ஏப்ப சாப்பையாக இருந்தால் என்ன? டேஸ்டிலயும் சரி, ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் நான் தான் மாஸ் என்று சொல்லும் கிழங்கு! இது சேப்பங்கிழங்கின் ஆரோக்கியக் கதை...
ஆங்கிலத்தில் Taro Root எனப்படும் சேப்பங்கிழங்கு பல நோய்களில் இருந்து விடுதலையை கொடுக்கிறது. நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உண்ட உணவை செரிமானம் செய்வதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக கருதப்படும் காய், சேம்பு எனப்படும் சேப்பங்கிழங்கு.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்
சேப்பங்கிழங்கின் நன்மைகள்
1. இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்து குறையும்
சேப்பங்கிழங்கு (Taro Root) ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்கள், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
2. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும்
மாவுச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கில் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கின்றன. செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்கும் சேப்பங்கிழங்கை சாப்பிட்ட உடனேயே, அது இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைத் தடுக்கிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பு
சத்துக்கள் நிறைந்த சேம்பை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும். இதில் உள்ள வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
எடையைக் குறைப்பதிலும் சேப்பங்கிழங்கு பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும், இது நாள் முழுவதும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. சேம்பில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இதை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
5. வயிறு தொடர்பான பிரச்சனைகள் விலகும்
ஏராளமான நார்ச்சத்து இருப்பதால்,. இது செரிமானத்தை சரியாக வைக்கும். இதனுடன் வாயு பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவையும் நீங்கும்.
6. கண்பார்வை அதிகரிக்கும்
சேப்பங்கிழங்கு சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி,ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் ராகி மாவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR