தயிரா மோரா? கோடை காலத்துக்கு ஏற்ற கலக்கல் பானம் எது?
Curd vs Buttermilk: கோடைகாலத்தில் தயிர் நல்லதா அல்லது மோர் நல்லதா என்ற குழப்பம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தயிரா மோரா: நாம் அனைவரும் உணவுடன் தயிர் உட்கொள்கிறோம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தயிரிலிருந்து தயாரிக்கப்படும் மோர், கோடைக்காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தயிரை விட சிறந்ததாக இருக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. ஆயுர்வேதத்தின் படி, மோர் ஜீரணிக்க இலகுவானது மட்டுமல்ல, அனைத்து உடல் வகைகளுக்கும் ஏற்றது. தயிர் உடலில் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் மோர் இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சி அளிக்கின்றது. கோடைகாலத்தில் தயிர் நல்லதா அல்லது மோர் நல்லதா என்ற குழப்பம் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.
தயிரா மோரா? எது உங்களுக்கு சிறந்தது?
1. தயிர் மற்றும் மோர் இரண்டும் குடல் பாக்டீரியாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் புரோபயாடிக் ஆகும். ஆனால் மோர் செரிமானத்திற்கு சிறந்தது. மோர் என்பது ஆரோக்கியமான புரோபயாடிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் பவர் ஹவுசாக இருக்கிறது. இது கடுமையான வெப்பத்திலும் கூட நமது உடலின் வெப்பநிலையை குறைவாக வைத்திருக்கும். எனவே, உங்கள் ஆற்றலைப் புதுப்பிக்கவும், இயற்கையாகவே உங்கள் உடலை குளிர்விக்கவும் குளிர்ந்த மோர் குடிக்கலாம். ஜீரணத்தில் சில கூடுதல் நன்மைகளை வழங்க சீரகப் பொடி, உப்பு, இஞ்சி ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
2. உங்கள் செரிமானம் வலுவாகவும் சரியாகவும் இருந்தால், உடல் எடையை அதிகரிக்க முழு கொழுப்புள்ள தயிரை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு இருந்தால், கூடுதல் அளவு தண்ணீர் மற்றும் குறைந்த தயிர் சேர்த்து மோர் சாப்பிடலாம்.
3. தயிர் இயற்கையில் உடலுக்கு வெப்பத் தன்மையை அளிக்கின்றது. அதே தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் வேறுபட்ட செயல்முறைக்கு உட்படுகிறது. அதன் உருவாக்கம் இயற்கையில் குளிர்ச்சியடையச் செய்கிறது. எனவே, கோடை காலத்தில் தயிருக்கு பதிலாக மோர் சாப்பிடலாம்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... மெட்டாபாலிஸம் அதிகரிக்க செய்ய வேண்டியவை
மோர் சாப்பிட்டால் ஏற்படும் பிற ஆரோக்கிய நன்மைகள்
- காரமான உணவுக்குப் பிறகு குடல் எரியும் உணர்வைத் தணிக்க உதவுகிறது.
- இது கால்சியத்தின் நல்ல மூலமாகும்.
- இதில் வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது.
- மோரில் காணப்படும் பால் கொழுப்பு குளோப்யூல் சவ்வு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பயோஆக்டிவ் புரதமும் ஆகும்.
- அதே குளோப்யூல்கள் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் ஆகும்.
- இது அமில ரிஃப்ளக்ஸ் காரணமாக ஏற்படும் வயிற்று எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. இதனால் அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கோடை காலத்தில் நீர்மோரை விட சிறந்த, எளிய பானத்தை நாம் காண முடியாது. உச்சி வெயில் காலத்தில் வீதிகளில் பந்தல் போட்டு சாலைகளில் செல்பவர்களுக்கு நீர்மோர் கொடுப்பது நம் மரபு. கோடை வெயிலின் தாக்கத்தை உடல் சமாளிக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இவ்வாறு செய்யப்படுகின்றது. இவற்றைத் தவிர இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் நீர்மோரில் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்:
1. அமிலத்தன்மையைக் குறைக்கிறது
நீர்மோர் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. இது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. உணவு உட்கொண்டவுடன் வாயுத்தொல்லையோ, அமிலத்தன்மையையோ நீங்கள் உணர்ந்தால், அதிகமாக நீர் மோர் குடிக்கத் துவங்குங்கள். சில நாட்களிலேயே நல்ல வித்தியாசத்தைக் காண்பீர்கள். உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது அமிலத்தன்மையையும் தடுக்கிறது.
2. மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது
மலச்சிக்கல் மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு மோர் ஒரு இயற்கையான தீர்வாகும். நீர்மோரை தினமும் குடித்தால், அது அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால், குடல் இயக்கம் எளிதாகி மலச்சிக்கல் காணாமல் போய்விடும்.
3. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
நீர் மோர் நம் உடலை, குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது. ஆகையால், இது ஒரு மிகச்சிறந்த கோடைகால பானமாக கருதப்படுகின்றது. வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படும்போதெல்லாம், உடனடி நிவாரணம் பெற ஒரு கிளாஸ் மோர் குடிக்க வேண்டும்.
மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 3 கிலோவை குறைக்கும் மாயாஜாலம்... இந்த ஜூஸை மட்டும் குடிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ