உடல் பருமன் குறைய... மெட்டாபாலிஸம் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

உடலின் வளர் சிதை மாற்றம் அல்லது மெட்டபாலிஸம் அதிகரித்தால், உடல் பருமன் குறைவதோடு, உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2023, 10:20 PM IST
  • உடல் பருமன் அதிகரிப்பதோடு பல நோய்கள் உங்கள் உடலைச் சூழ்ந்திருக்கும்.
  • வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
  • வளர்சிதை மாற்றத்திற்கான அத்தியாவசிய கூறுகள் இல்லாத உணவை உண்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பலவீனப்படுத்தும்.
உடல் பருமன் குறைய... மெட்டாபாலிஸம் அதிகரிக்க செய்ய வேண்டியவை! title=

உங்கள் வளர்சிதை மாற்றத்தை எவ்வாறு அதிகரிப்பது: இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், உடல் பருமன் பிரச்சனை என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. உட்கார்ந்து வேலை செய்கிறார்கள், உடல் உழைப்பு இல்லாதது மற்றும் துரித உணவு என்னும் குப்பை உணவுகளை  சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக, வளர்சிதை மாற்றம் பலவீனமடையத் தொடங்குகிறது. வளர்சிதை மாற்றம் என்பது உடலின் ஒரு முக்கிய செயல்பாடு, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதாவது, கெட்ட பழக்கங்களால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை நீங்கள் மந்தமாக்கினால், உடல் பருமன் அதிகரிப்பதோடு பல நோய்கள் உங்கள் உடலைச் சூழ்ந்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வளர்சிதை மாற்றமும் பலவீனம் அடையாமல் இருக்க, நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

1. ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தல்

நொறுக்குத் தீனி, நாள் முழுவதும் பிஸ்கட் சாப்பிடுதல், சோடா மற்றும் குளுக்கோஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு அவற்றின் பாதிப்புகள் தொடரும். எனவே துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணவும்.

2. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் 

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கான அத்தியாவசிய கூறுகள் இல்லாத உணவை உண்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை பலவீனப்படுத்தும். பொதுவாக நார்சத்து மிக குறைவாக உள்ள உணவுகள் வளர் சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கும்

3. தூக்கமின்மை
 குறைவான தூக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. எனவே தூக்கமின்மை உடல் பருமனை அதிகரிக்கும்.தூக்கம் சரியாக இல்லை என்றால் அடுத்த நாள் காலை எழுந்தால் மிக சோர்வாகவும், வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!

4. உடற்பயிற்சியின்மை 

உடற்பயிற்சியின்மையால், உடலின் மெட்டபாலிசம் மிகவும் பலவீனமாகிவிடும். தினமும் சில ஜம்பிங் ஜாக் செய்வது போன்ற எளிய உடற்பயிற்சிகள் முக்கியம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். அதோடு, உடற்பயிற்சி இல்லை என்றால், உடல் சோர்வோடு, மன சோர்வும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

5. நீர் சத்து குறைதல்

நீர் சத்து சரியாக கிடைக்காமல் போனால், உடலில் தற்காலிக மனச்சோர்வு பிரச்சனை ஏற்படலாம், இது வளர்சிதை மாற்றத்தை கடுமையாக பாதிக்கும். எனவே மெட்டபாலிஸத்தை அதிகரிக்க தண்ணீர் போதுமான அளவு அருந்துவது மிக முக்கியம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை கவனத்தில் கொண்டு, நீங்களும் இந்த தவறுகளை செய்தால், இந்த தவறுகளை சரியான நேரத்தில் சரிசெய்ய முயற்சிக்கவும்.  வளர்ச்சி சிதை மாற்றம் என்னும் மெட்டாபாலிஸத்தை அதிகரிக்க, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அட்டவணையை தயார் செய்யவும். சில எளிய நடத்தை மாற்றங்கள், நீங்கள் பெறும் தூக்கத்தின் அளவில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்றவை, உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்பட உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News