கோடையில் கூந்தல் பராமரிப்பு: கோடை வெயில், தூசி-மண் மற்றும் மாசுபாட்டின் தாக்கம் நம் சருமத்தில் மட்டுமல்ல, கூந்தலிலும் ஏற்படும். ஆகையால், கோடையில் கூந்தலுக்கு சரியான பராமரிப்பு அவசியம் தேவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், சிலருக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு முடி அரிப்பு, பிசுபிசுப்பு அல்லது வறண்ட கூந்தல் ஆகிய பிரச்சனைகள் தென்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முடிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமாகிறது. கோடையில் கூந்தலை எவ்வாறு பராமரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


கோடையில் கூந்தலை பராமரிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.


முடி கழுவுதல்:


அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்லும் போது நமது தலைமுடி சூரிய ஒளி மற்றும் தூசி ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரவில் வீட்டை அடையும் போது கூந்தல் மிகவும் அழுக்காகி, ஒட்டும் தன்மையுடன் இருக்கிறது. 


மேலும் படிக்க | இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்; நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்


ஆகையால், வீட்டிற்கு சென்றவுடன் எப்பொழுதும் தலைமுடியை முதலில் கழுவுங்கள். இதற்கு அதிக ரசாயனங்கள் கலக்காத மைல்டான ஷாம்புவை பயன்படுத்துங்கள். எனினும், தினமும் தலைமுடியைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் முடியைக் கழுவலாம்.


ஹெர் மாஸ் பயன்படுத்தலாம்: 


முடி ஆரோக்கியமாக இருக்க ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள். முடிக்கு ஹேர் மாஸ்க் மிகவும் முக்கியமானது. இது முடியை நீரேற்றமாக வைத்திருக்கும். இதனுடன், இது முடியின் வறட்சியையும் தடுக்கிறது. இந்த மாஸ்க் செய்ய, கற்றாழை, தயிர் மற்றும் முட்டை ஆகியவை சிறந்ததாக கருதப்படுகிறது.


முடியை சீப்பு கொண்டு வார வேண்டும்:


பெரும்பாலும் கோடையில், நாள் முழுவதும் கூந்தலை கொண்டையாகவோ, அல்லது இறுக்கமான போனிடெயில் போட்டோ விட்டுவிடுகிறோம். இதனால், நாளின் முடிவில், முடியில் சிக்கு ஏற்படுவதுண்டு. ஆகையால், ஒரு நாளில் ஒரு முறையாவது கூந்தலை நன்றாக சீப்பு கொண்டு வார வேண்டும். 


ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்:


உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆரோக்கியமான உணவுமுறை எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று கூந்தலுக்கும் நல்ல உணவுமுறை மிகவும் அவசியமாகும். எனவே, முடியை மென்மையாகவும் வலுவாகவும் வைத்திருக்க, அதிக புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நாவல் பழத்தை சாதாரணமாக நினைக்காதீங்க, இவ்ளோ நன்மைகள் இருக்கா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR