கோடைகால உணவு: கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில் நம்மை பாடாய் படுத்துகிறது. அதை அலட்சியம் செய்வது நமது ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும். கோடை மாதங்களில் பலர் நீரிழப்பால் பாதிக்கப்பட்டு  குறைந்த ஆற்றல் அளவை அனுபவிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகையால், கோடைக் காலத்தில், அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான உணவு மற்றும் பானங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதனுடன் கோடை காலத்தில் சில காய்களின் நுகர்வு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 


அவற்றில் முக்கியமான ஒரு காய் சுரைக்காயாகும். ஆம், வெயில் காலத்தில் சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுரைக்காயில் வைட்டமின்-சி, சோடியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெரும்பாலான மக்களுக்கு சுரைக்காய் பிடிப்பதில்லை. சிலருக்கோ இதன் வித்தியாசமான சுவை மிகவும் பிடித்தும் இருக்கிறது. இதன் நுகர்வு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன் குளிர்ச்சியையும் தருகிறது. சுரைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


சுரைக்காயை இந்த வழியில் சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும்


- சுரைக்காய் கோஃப்தா
- சுரைக்காய் தயிர் பச்சடி 
- சுரைக்காய் கறி
- உருளைக்கிழங்கு சுரைக்காய் கறி
- சுரைக்காய் கடலை பருப்பு கூட்டு 


சுரைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


- சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் மனநல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.


- சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து போன்றது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். 
- மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் பைல்ஸ் நோய்களைத் தடுக்க சுரைக்காய் உதவுகிறது. 


- செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. 


- சுரைக்காய் எடை குறைக்கவும் உதவுகிறது. 


மேலும் படிக்க | Men's Health: ஆண்கள் பூசணி விதிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும் 


- சுரைக்காயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு நன்கு ஊட்டமளிக்கிறது, தேவையற்ற பசியைத் தடுக்கிறது. 


- உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சோடியம், பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளன.


- அதிக அளவு இரும்புச்சத்துடன் இதில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவையும் நிறைந்துள்ளன. 


- சுரைக்காய் ஆண்டி ஆக்சிடெண்டாகவும் உதவுகிறது.


கோடைக்கு சுரைக்காய் ஒரு வரப்பிரசாதம்


சுரைக்காய் இந்தியாவில் மிகவும் சுவையான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சுரைக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சுரைக்காய், பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 


சுரைக்காய் உட்கொண்டால் இவற்றை தவிர்க்கலாம்: 


- வெப்பத்தால் வரும் மயக்கம்
- உடலில் நீர் பற்றாக்குறை
- வெப்ப பக்கவாதம்
- வாந்தி, பேதி சங்கடம் 
- வெப்பம் காரணமாக பதட்டம்
- வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல்
- வெப்ப சோர்வு
- வெப்ப அழுத்தம்


சுரைக்காயை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், வெயில், தூசி, வியர்வை, அதிக வெப்பம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். 


பல வித கோடை கால உடல் உபாதைகளை தவிர்க்க வேண்டுமானால், உங்கள் தினசரி உணவில் அடிக்கடி சுரைக்காயை சேர்த்துக்கொள்வது நல்லதாகும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | புளி டீ ட்ரை பண்ணிருக்கீங்களா, பலன்களைக் கேட்டா ஆச்சரியப்படுவீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR