சிறுநீரக ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்... சில சூப்பர் உணவுகள்
Superfoods For Kidney: உடலில் ஒரு நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டி போல் செயல்படும் சிறுநீரகம். கிட்னி ஆரோக்கியம் சீரான உடல் செயல்பாட்டுக்கு மிக முக்கியம்.
Superfoods For Kidney: உடலில் ஒரு நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டி போல் செயல்படும் சிறுநீரகம். கிட்னி ஆரோக்கியம் சீரான உடல் செயல்பாட்டுக்கு மிக முக்கியம். நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடலில் இருந்து அதிகப்படியான திரவம் மற்றும் அழுக்குகளை சரியாக அகற்ற முடியாத நிலை ஏற்படும். இதனால், சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், சிறுநீரக நோய்த்தொற்றுகள், பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிறுநீரகத்திற்கான சிறந்த சைவ உணவுகள்
சிறுநீரக்த்திற்கு ஏற்படும் பாதுப்புகளை தவிர்க்க, உங்கள் கிட்னியை வலுப்படுத்தும் உணவுகளை டயட்டில் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக ஆரோக்கியத்தை (Kidney Health) மேம்படுத்த எந்தெந்த சைவ உணவுகளை உண்ண வேண்டும் என்பதை உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் மூலம் தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி
முள்ளங்கி சிறுநீரகத்திற்கு நன்மை பயக்கும் காய்களில் மிக முக்கியமான ஒன்று. இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை சிறுநீரகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளில், நச்சுப் பொருட்களை வெளியேற்றும் பண்புகளும், வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. கீரை, கோஸ் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
நிலத்தடியில் வளரும் இனிப்பு சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, சிறுநீரகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் சோடியத்தின் அளவும் மிகக் குறைவாக இருப்பதால், சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகின்றன.
மேலும் படிக்க | எச்சரிக்கை... மீண்டும் சூடு படுத்தினால் விஷமாகும் சில உணவுகள்
முழு தானியங்கள்
அதிக கலோரி கொண்ட சுத்திகரிக்கபட்ட அல்லது தோல் நீக்கப்பட்ட உணவு தானியங்களை விட முழு தானியங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் அவை நமது சிறுநீரகங்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. உங்கள் தினசரி உணவில் கினோவா, பழுப்பு அரிசி மற்றும் முழு கோதுமை ரொட்டியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இஞ்சி
இஞ்சியில் அதிக அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளும் உள்ளன. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இஞ்சியில் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இவை நச்சுப் பொருட்களை உடலில் இருந்து அகற்ற உதவுகின்றன.
பூண்டு
உணவின் மணத்தையும் சுவையையும் அதிகரிக்க பூண்டை சலையலில் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இது ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. இதில் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஏராளமாக காணப்படுவதால், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ