Addiction Research: மது போதைக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து விடுபடுவது மிகவும் கடினம். ஆனால் இந்த போதை ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஐரோப்பாவில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில் ஆச்சரியமான முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒருவரை அடிமைப்படுத்துவதில் இன்று மது மற்றும் இணையம் இரண்டும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்த அடிமைத்தனத்திற்கு மனித மரபணுக்கள் காரணம் என்று தெரியவந்துள்ளது. அந்த மரபணுவை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மது போதைக்கு இணையாக இணைய போதையும் அதிகரித்துள்ளது என்பது ஆச்சரியமான தகவல் என்பது அனைவருக்கும் திகைப்பைக் கொடுக்காது. ஜர்னல் ஆஃப் பெர்சனலைஸ்டு மெடிசின் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு நபரின் அடிமைத்தனமும் மரபியல் தொடர்பானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்,.


இந்த போதைக்கும், அடிமைத்தனத்துக்கும் முன்னோர்களிடமிருந்து பெறப்படும் மரபணுக்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்தமரபணுக்கள் காலப்போக்கில் மாறுகின்றன, இது பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


மேலும் படிக்க | ஜூஸ் கேட்ட கஸ்டமருக்கு... சப்ளையர் என்ன கொடுத்தார் தெரியுமா? - மருத்துவமனையில் 7 பேர்


ஜர்னல் ஆஃப் பெர்சனலைஸ்டு மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு நபரின் அடிமைத்தனமும் மரபியல் தொடர்பானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த அடிமையாதல் மரபணுக்கள் மூலம் மட்டுமே நடந்தாலும், மரபணுக்கள் காலப்போக்கில் மாறுகின்றன, இது பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், அடிப்படை என்பது மரபணுக்கள் மட்டுமே.


இந்த ஆராய்ச்சிக்காக ஹங்கேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து 303 இளைஞர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்காக, அவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்பட்டது, அதில் மது, போதைப்பொருள், புகையிலை, ஆன்லைன் கேம்ஸ், சூதாட்டம், இணையத்தைப் பயன்படுத்தும் முறைகள், நேரம் போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டது. இந்த ஆய்வில், அனைத்து வகையான பதில்களும் 32 வகையான மரபணுக்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது.


ஹங்கேரியில் உள்ள Semmelweis பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான கசாபா பேட்டா (Kasaba Bata), 50 முதல் 70% மனித குணாதிசயங்கள் அவற்றின் மரபணுக்களால் ஏற்படுவதாகவும், மது போதைக்கு காரணமான Fox-N3 மரபணு RS59364 உடன் தொடர்புடையது என்றும் கூறினார். பலவீனமான மரபணுக்கள் போதைக்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும் என்று கசாபா கருதுகிறார்.


மற்றொரு ஆய்வில், மதுவை விட இணையம் மோசமான போதை என்று கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் நடத்திய ஆய்வின்படி, வளர்ந்த நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 94% பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். வளரும் நாடுகளில் 65% க்கும் அதிகமான இளைஞர்கள் அதிக அளவு இணையத்தை பயன்படுத்துகின்றனர்.  


மேலும் படிக்க | பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி! வாயை அடைத்த ரிஷி சுனக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ