Silver Health Benefits: நமது உடலுக்கு எது நன்மை பயக்கும், எது நமது உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கும் என நாம் தேடித் தேடி தகவல்களை சேகரிக்கிறோம். ஆனால் நாம் எண்ணிக்கூட பார்க்காத சிலவற்றில் நம் உடலுக்கான பல ஆரோக்கிய நன்மைகள் புதைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட ஒன்றுதான் வெள்ளி. வெள்ளியை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. வெள்ளியை உட்கொள்வது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது.


வெள்ளியை பஸ்மமாக சாப்பிடுவது உடலுக்கு ஏற்றது. இதை ரஜத் பஸ்மம் என்று கூறுவது வழக்கம். ஆயுர்வேதத்தின் படி, ரஜத் பஸ்மம் ஒரு இயற்கையான ஆரோக்கிய அம்சமாகும். இது பல நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது.


வெள்ளியின் ஆரோக்கிய நன்மைகள்: வெள்ளி பஸ்மம் சாப்பிடுவதால் ஏற்படும் சிறப்பு ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits) பற்றி நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத எழுத்தாளரும் நிபுணருமான டாக்டர் அப்ரார் முல்தானி கூறியுள்ளார்.


ஆயுர்வேதத்தின் ரச சாஸ்திரத்தில், மருத்துவ குணங்கள் உள்ள அனைத்து உலோகங்களையும் பதப்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், பொதுவாக வெள்ளி முதலியவற்றை அப்படியே உட்கொள்ள முடியாது. பல நிலைகள் மற்றும் செயல்முறைகளை கடந்து, இயற்கையான வெள்ளி ஒரு உண்ணக்கூடிய சாம்பல் வடிவத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 


பஸ்மமாக்கப்பட்ட வெள்ளி பின்வரும் நன்மைகளை அளிக்கிறது.


- உடல் வலி மற்றும் வீக்கத்தைப் போக்குவதில் வெள்ளி பஸ்மம் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.


- வாதம் மற்றும் பித்த தோஷங்களை இயற்கையாக சமன் செய்கிறது.


ALSO READ:World Vegan Day 2021: முட்டைக்கு ஈடாக புரோட்டீன் உள்ள ‘5’ சைவ உணவுகள்..!! 


- ஒருவரது மனநலம் குன்றியிருந்தால், அவருக்கு ரஜத் பஸ்மம், அதாவது வெள்ளி பஸ்மம் மிகவும் நன்மை பயக்கும்.


- இரத்த சோகை (Anemia), வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய பிரச்சனைகளில் வெள்ளி பஸ்மம் பயனுள்ளதாக இருக்கும்.


- சிறு வயதிலேயே சருமம் முதுமை அடைவதால் உங்களுக்கு பிரச்சனை இருந்தால், சருமத்தை இளமையாக மாற்ற வெள்ளி பஸ்மத்தை உட்கொள்ளலாம்.


- இதய நோய்கள், பலவீனமான செரிமான சக்தி, உடல் பலவீனம், நீரிழிவு (Diabetes) போன்ற பிரச்சனைகளை வெள்ளி பஸ்மம் குணப்படுத்தும்.


வெள்ளி பஸ்மத்தை எப்போது உட்கொள்ள வேண்டும்?


- டாக்டர் அப்ரார் முல்தானி கூறுகையில், வெள்ளி பஸ்மம் அதாவது ரஜத் பஸ்மத்தை காலையிலும் மாலையிலும் உணவு உண்ட பிறகு உட்கொள்ளலாம் என்றார்.


- 100-125 கிராம் வெள்ளி பஸ்மத்தை (ஒரு நாள் முழுவதும்) தேன் அல்லது பிராமி சாறுடன் உட்கொள்ளலாம்.


- பொதுவாக ரஜத் பஸ்மத்தை உட்கொள்வது பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்.


- இருப்பினும், வெள்ளி பஸ்மத்தை  உட்கொள்ளும் முன், ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியமாகும்.


பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானவை அல்ல. இவை கல்வி நோக்கிற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.


ALSO READ:வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR