மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! நார்ச்சத்தின் புதையல்
Sweet Potato And Diabetes: நமக்குத் தேவைப்படும் தினசரி வைட்டமின் `ஏ` தேவையை பூர்த்தி செய்யும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்பதை பலரும் ஒரு உணவுப்பொருளாகவே பார்க்கின்றனர். உண்மையில் உலகெங்கும் விளையும் பயிர்களில் அதிகளவில் விளையும் பொருட்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. ஆனால், அதன் மருத்துவ குணங்களைத் தெரியாமலேயே நாம் உண்டு வருகிறோம். உண்மையில், நமக்குத் தேவைப்படும் தினசரி வைட்டமின் 'ஏ' தேவையை பூர்த்தி செய்யும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மலச்சிக்கலை தீர்க்கும் அருமருந்தாகவும் உள்ளது. உணவுப் பொருளாகத் திகழ்கிறது. வேர்ப் பகுதிகளில் விளையும் இந்த கிழங்கு பெரிதாக, அடர்த்தியாக பல நல்ல சத்துக்கள் நிறைந்து விளங்குகிறது.
அதிலும், சர்க்கரை வள்ளியை எப்படி சாப்பிட்டால் அதிக பயன் கிடைக்கும் என்பதும் பலருக்கு தெரியவில்லை. உண்மையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால், அதிக நார்ச்சத்து கிடைக்கும். ஒருநாளில் நமக்குத் தேவைப்படும் வைட்டமின் 'சி' அளவில் பாதியை இந்த அருமையான கிழங்கு கொடுத்துவிடும்.
மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்
சிகப்பு, ஆழ்ந்த நீலம், வெள்ளை, மஞ்சள் என விளையும் இடத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மற்ற எந்தக் காய்கறிகளுக்கும் இருக்கும் சக்தியைப் போல் மூன்று மடங்கு சக்தியுடன், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பீடாகரோடின், வைட்டமின்கள், மாங்கனீஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் என ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக உள்ள இந்தக் கிழங்கில் தேங்கிக்கிடக்கும் புரதச்சத்து ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்’ சக்தி கொண்டது.
அதுமட்டுமல்ல, தோற்றத்தை இளமையாக வைத்துக் கொள்ளும் மார்கண்டேய கிழங்கு என்றே சர்க்கரை வள்ளியைச் சொல்லலாம். இந்தக் கிழங்கில் உள்ள வைட்டமின் பி6 சத்து இருதயத்துக்கு நல்ல டானிக் என்பதால், சுவாசப் பாதிப்பை நீக்கும் நிவாரணியாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கிறது.
மேலும் படிக்க | வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?
இனிப்பான சுவையில் இருப்பதாலும், கிழங்கு வகையை சேர்ந்தது என்பதாலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டியதில்லை. உடலில் இன்சுலின் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்ட சர்க்கரைவள்ளி என்பது ஆச்சரியமானது. ஆனால் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை, மாவுச்சத்துக்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற மிகச் சிறந்த கிழங்கு சர்க்கரை வள்ளி. சர்க்கரை வள்ளியின் அருமை பெருமைகளை பட்டியலிட்டாலும் அடங்காது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ