வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு. குழந்தைகள், பெரியவர்கள் எஅன அனைத்து வயதினருக்கும் ஏற்றது. உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மகத்துவம் தெரியாமலேயே நாம் நமது உணவில் பயன்படுத்திவருகிறோம். 
சர்க்கரை வள்ளிக்கிழங்கு நுரையீரலில் ஏற்படும் எம்பஸீமா நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது, குடல் புற்றுநோயில் தொடங்கி உடலிலுள்ள அனைத்து உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதோடு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உள் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, உடல் முழுவதையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம்.  


சரி, இந்தக் கிழங்கை வேக வைத்து சாப்பிடுவதா? இல்லை சுட்டு சாப்பிடுவதா என்ற கேள்வி பலருக்கும் எழும். உண்மையில், சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களும் சரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுட்டு சாப்பிடுவது, அதன் மருத்துவ குணங்களை அதிகரித்துக் கொடுக்கும்.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கா? உஷார்!! சிறுநீரக கல் இருக்கலாம்: இந்த உணவுகளில் கவனம் தேவை


உடலுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று அதற்கு பெயர் வந்ததற்கு அதன் இனிப்புச்சுவையே காரணம். சர்க்கரை என்ற பெயர் இருப்பதாலேயே அதை சாப்பிடக்கூடாது என்ற தவறான நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. அது மூடநம்பிக்கை என்பது, சர்க்கரை வள்ளியின் நன்மைகள் தெரிந்தால் புரிந்துவிடும்.


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட சில சத்துகள் சில வகையான புற்றுநோய் வராமல் தடுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கலோரிகள் அதிகம் என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு எதிர்மறையான பலன் கிடைக்கும். 


எலும்புகள் வலுப்பெற உதவும் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகளைக் கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைத்து என்றும் இளமையாகக் காட்சியளிக்க உதவும் என்பது அழகை மேம்படுத்தும் சர்க்கரை வள்ளியின் தனிச்சிறப்பு ஆகும்.   


மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!


சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பி6 வைட்டமின், அதிகம் இருப்பதால் உடலில் டோபமைன் ஹார்மோன் சுரக்கும் போது, மனதில் மகிழ்ச்சியை அதிகரித்து நம்மை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.


சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளதால் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு அதிகம் அளித்து கண் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கலை தீர்க்கும் என்பதால், குடல் புற்றுநோயை வராமல் தடுக்கும்.


பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலைத் தவிர சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொடுக்கலாம். 7 மாதம் ஆன பிறகு, குழந்தைக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  


மேலும் படிக்க | Heart Health: இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சில’ பழங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ