நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை பாதுகாக்கும் ‘சில’ உணவுகள்!

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 18, 2022, 09:35 PM IST
  • நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை.
  • கண்பார்வை பலவீனமடையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
  • கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை பாதுகாக்கும் ‘சில’ உணவுகள்! title=

கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், கண்பார்வை பலவீனமடையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. எனவே கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய்

ஆம்லா என்னும் நெல்லிக்காய் கண் பார்வைக்கு மிகச் சிறந்த ஆதாரம். அம்லாவில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதனால் கண்பார்வை வலுவடைகிறது. நெல்லிக்காயில் செய்யப்பட்ட நெல்லிக்காய் பொடி, சட்னி, ஊறுகாய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய் போன்றவை கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயை தினமும் உட்கொள்ள வேண்டும்.

கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்பார்வையை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

பச்சைக் காய்கறிகள்

கண்பார்வையை மேம்படுத்த பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் வைட்டமின் ஏ (கரோட்டின்), வைட்டமின் "சி" மற்றும் வைட்டமின் "பி" ஆகியவை காணப்படுகின்றன. பச்சைக் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை அதிகரிக்கும்.

வெண்ணைய் பழம்

வெண்ணைய் பழம் என்னும் அவகேடோவில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் கண்களின் விழித்திரை வலுப்பெறுவதோடு முதுமை வரை உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் கொய்யாவில் ஏராளமாக உள்ளது. வைட்டமின் சி கண்களுக்கு நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

கடல் உணவு

பல கடல் உணவுகள் கண்களை ஆரோக்கியமாக்குகின்றன. டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற கடல் உணவுகள் விழித்திரையை பலப்படுத்துகின்றன. இந்த மீன்களில் DHA எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது, இது விழித்திரையின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.

உலர் பழங்கள்

பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை மேம்படுத்தும். உலர் பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News