கொழுப்பு கல்லீரல் அறிகுறிகள்... லிவரை காலி செய்யும் சில ஆபத்தான பழக்கங்கள்!
கல்லீரல் உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
நம் உடலில் கல்லீரல் தான், உடலில் மிகப்பெரிய உறுப்பாகவும், மிக சுறுசுறுப்பக இயங்கும் உறுப்பாகவும் உள்ளது. கல்லீரலுக்கு, தன்னை சீர் செய்து கொள்ளும் திறன் உண்டு. உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது, ரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் உடல் உழைப்பே இல்லாத வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை காரணமாக, கொழுப்பு கல்லீரல் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாக (Health Tips) மாறி விட்டது.
கொழுப்பு கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் ( Symptoms of Fatty Liver)
கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், உடலில் இருந்து நச்சுக்கள் சரியாக வெளியேற முடியாமல், உடலில் தேங்கி, ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பாதங்களில் வீக்கம் அல்லது கூச்ச உணர்வு, செரிமானம் சரியாக நடைபெறாததால் அடிக்கடி ஏற்படும் குமட்டல் வாந்தி, வயிற்றுப் பகுதியில் வீக்கம் போன்றவை கொழுப்பு கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள். கொழுப்பு கல்லீரல் பாதிப்பை அலட்சியம் செய்தால், கல்லீரல் செயலிழக்கும் அபாயம் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிட்டால், பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாகவே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. அலுவலகம் செல்பவர்கள் நேரமின்மை காரணமாக, ரெடு டு ஈட் வகை உணவுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது ரெமேட் சப்பாத்திகள், அதற்கான சைட் டிஷ்கள், உறைய வைக்கப்பட்ட பரோட்டா வகைகள் ஆகியவை அதிகம் கிடைக்கின்றன. நீண்ட கால கெடாமல் இருக்க அவற்றில் சேர்க்கப்படும் பிரிசர்வேடிவ்கள் மற்றும் ரசாயனங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் கல்லீரலை கடுமையாக பாதிக்கிறது.
துரித உணவுகள்
துரித உணவுகள் சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து விட்டது. என்றாவது ஒரு நாள் சாப்பிடுவதில் தவறில்லை. னால், அவற்றை வழக்கமாக்கிலக் கொள்வது கல்லீரலை பெரிதும் பாதிக்கும். ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பர்கர்கள், சிப்ஸ் போன்றவை, எக்கச்சக்க கலோரிகள் நிறைந்தவை. இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு கல்லீரலை பெரிதும் பாதிக்கும்.
மைதா உணவுகள்
மைதா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. பரோட்டா, பிரெட், பாஸ்தா இதில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. மேலும், இதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் லிவரை காலி செய்து விடும். கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கும், இந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து என்பதே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
சர்க்கரை கலந்த பானங்கள்
அதிக அளவில் சர்க்க்ரை கொண்ட சோடா பானங்கள், எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் ஆற்றல் பானங்கள், கேன் அல்லது பேக் செய்யபட்ட பழச்சாறுகள் கொழுப்பு கல்லீரல் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். அவற்றில் நிறைய சர்க்கரை மற்றும் பிரக்டோஸ் உள்ள நிலையில், இவை கொழுப்பாக கல்லீரலில் சேரும்.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்
பால் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்று தான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், பால், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய் போன்ற அதிக கொழுப்புள்ள பால் பொருட்களும் கொழுப்பு கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் இவற்றில் அதிக நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இது கல்லீரலில் கொழுப்பாக சேர்கிறது.
மது அருந்தும் பழக்கம்
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மது போதைக்கு ஆளாகியுள்ளனர். கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகியிருந்தாலும், கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்கவும், மது அருந்தும் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். மது பழக்கம், நரம்பு, மூளை, இதயம் என பல பிரச்சனைகளுக்கு மூலகாரணமாகவும் கருதப்படுகிறது.
சர்க்கரை பானங்கள்
சர்க்கரை அதிகம் உள்ள சோடா பானங்கள், மற்றும் பிற செயற்கை பழ பானங்களையும், குளிர்பானங்களையும் அதிகமாக அருந்துவது கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும்.. அவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது, இது கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 30 நாளில் கொழுப்பு கரையும்... உங்களை ஏமாற்றாத... குறைந்த கலோரி கொண்ட டயட் பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ