Causes For Liver Damage: உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் உள்ள உறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக அவசியமாகும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். ஏனெனில் கல்லீரல் பல உடல் செயல்பாடுகளில் பங்கு வகிக்கிறது.
உடலில் உள்ள நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு கல்லீரல் பொறுப்பாகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், கல்லீரல் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். கல்லீரல் பாதிப்புக்கு நமது வாழ்க்கை முறை முக்கிய காரணமாக உள்ளது. கல்லீரல் பாதிப்புக்கு முக்கியமான 5 காரணங்களையும், கல்லீரலைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில குறிப்புகளையும் பற்றி இங்கே காணலாம்.
கல்லீரல் பாதிப்புக்கான 5 முக்கிய காரணங்கள்
- உணவின் மீது கட்டுப்பாடு: இன்றைய அவசர வாழ்வில் நாம் பல வித ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்கிறோம். நாம் உண்ணும் டயட்டில் சரிவிகித மற்றும் சத்தான உணவு குறைந்து வருகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை மிகவும் கவனத்துடன் உட்கொள்வது அவசியம். எப்போதும் முழு வயிறு சாப்பிடுவதை தவிர்த்து சற்று குறைவாக சாப்பிடுவது நல்லது. சரியான அளவை விட அதிகமாக சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும். தேவையை விட அதிக தண்ணீரை குடிப்பதும் தீங்கு விளைவிக்கும்.
- எடை மற்றும் உயரம்: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உயரம் மற்றும் எடைக்கு இடையிலான சமத்துவம் அவசியம். அதாவது உடலின் பிஎம்ஐ சரியாக இருக்க வேண்டும். அதிக எடை மற்றும் குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏர்படலாம். உதாரணமாக ஒரு ஆணின் உயரம் 160 சென்டிமீட்டர் என்றால், அவரது எடை அதிகபட்சம் 60 கிலோவாக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண்ணின் உயரம் 160 என்றால் அவரது எடை 55 கிலோவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | LDL கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்க
- சரியான நேரத்தில் சாப்பிடுவது: ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதும், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் மிக முக்கியம். உறக்கம், உணவு என அனைத்தும் சரியான நேரத்தில் சரியான அளவில் இருக்க வேண்டும்.
- சர்க்கரையைத் தவிர்க்கவும்: அதிக சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு, குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் அல்லது மால்டோஸ் சிரப்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்ற OSE கொண்ட சர்க்கரை பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக, கடைகளில் வாங்கப்படும் பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள், சாஸ்கள் அல்லது உறைந்த இனிப்புகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இவற்றில் அதிகப்படியான கவனம் தேவை.
- அதிக மருந்துகளைத் தவிர்க்கவும்: அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வது கல்லீரலையும் சேதப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் சிறு வலிகளுக்கு கூட, அவற்றை விரைவில் போக்க வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியல்ல. அதிகப்படியான மருந்துகள் கல்லீரலை பாதிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை அடித்து விரட்டும் பச்சை இலைகள்: மூட்டு வலியும் குணமாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









