மாரடைப்பு வரும் முன் கால்களில் இந்த அறிகுறிகள் தெரியும்: அலர்டா இருங்க மக்களே!!
Symptoms of Heart Attack in Feet: மாரடைப்பு ஏற்படும் முன் கால்களிலும் சில அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த அறிகுறிகளை பலர் புறக்கணித்து விடுகிறார்கள்.
Symptoms of Heart Attack in Feet: அவசர வாழ்க்கை, துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிகப்படியான மன அழுத்தம் ஆகிய காரணங்களால் இந்த காலத்தில் பலரை பலவித நோய்கள் ஆட்கொள்கின்றன. இவற்றில் மாரடைப்பு ஒன்றாகும். சமீப காலங்களில் பலர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான உடல்நல பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. மாரடைப்பால் உயிருக்கும் ஆபத்து உள்ளது.
மாரடைப்பின் அறிகுறிகள்
மாரடைப்பை பொதுவாக மக்கள் மார்பில் வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகளால் அடையாளம் காண்கிறார்கள். ஆனால் மாரடைப்பு ஏற்படும் முன் கால்களிலும் சில அறிகுறிகள் தென்படும் என்பது பலருக்கு தெரியாது. இதன் காரணமாக இந்த அறிகுறிகளை பலர் புறக்கணித்து விடுகிறார்கள். இந்த அறிகுறிகளை மிக சாதாரணமானவையாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை ஆபத்தாக முடியலாம். கால்களில் தெரியும் மாரடைப்பின் சில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கால்களில் தெரியும் மாரடைப்பின் அறிகுறிகள்:
பாதங்களில் வீக்கம்
கால்கள், கணுக்கால் அல்லது ஆட்டு சதைகளில் திடீரென வீக்கம் ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் பலவீனம் ஆகி உடலின் கீழ்பகுதிகளுக்கு இரத்தத்தை சரியாக செலுத்த முடியாமல் போனால் இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்படுகின்றன.
கால்கள் கனமாக இருப்பது, கால்களில் வலி
சிறிது நேரம் நடந்தாலோ அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போதோ கால்களில் வலி அல்லது கனமான உணர்வு ஏற்படுவது மாரடைப்பின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த வலி அதிகமாகி நெஞ்சு வரை பரவக்கூடும்.
கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு
கால்களில் கூச்ச உணர்வு ஏற்பட்டாலோ அல்லது உணர்வின்மை இருந்தாலோ அதை மாரடைப்பின் அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது நரம்புகள் சேதமாகும்போது இவை ஏற்படுகின்றன.
கால் தோல் நிறத்தில் மாற்றம்
கால்களின் தோல் மஞ்சள், ஊதா அல்லது நீல நிறமாக மாறினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைவதற்கான அறிகுறியாக இருக்கின்றது.
கால்களில் குளிர்ச்சி
கால்கள் குளிர்ச்சியாக இருப்பது அல்லது அவற்றில் சுறுசுறுப்பு இல்லாத நிலை இருப்பது மாரடைப்புக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது
மார்டைப்பின் பிற அறிகுறிகள்
- இதயத்தில் வலி அல்லது அழுத்தம்
- மூச்சு வாங்குவதில் சிரமம்
- பதட்டம் அல்லது தலைசுற்றல்
- வாந்தி அல்லது குமட்டல் சங்கடம்
- அதிகமாக வியர்ப்பது
மேலும் படிக்க | கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? சுகர் லெவல் எகிறுது... ஜாக்கிரதை!!
இந்த விஷயங்களில் கவனம் தேவை:
- அனைவருக்கும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒரே போன்று இருப்பதில்லை.
- சிலருக்கு லேசான அறிகுறிகளும் சிலருக்கு தீவிரமான அறிகுறிகளும் தென்படுகின்றன.
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய நோய்க்கான அறிகுறிகள் மாறுபட்டு இருக்கின்றன.
இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
- ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்
- வழக்கமான உடற்பயிற்சி அவசியம்
- புகைப்பிடித்தல் மதுபானம் அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவும்
- மன அழுத்தத்தை தவிர்க்கவும்
- ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது நல்லது
கால்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ