டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்

Platelet Count: பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 12, 2024, 04:45 PM IST
  • கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.
  • வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது.
  • இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்

Platelet Count: நாடு முழுதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரிக்கிறது. இந்த நோய் தீவிர வடிவை எடுக்கும் போது உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது. இரத்த உறைதலில் பிளேட்லெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் குறைபாடு ஏற்பட்டால், அது கடுமையான இரத்தப்போக்கு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source

பிளேட்லெட் எண்ணிக்கை

எனினும் பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது. இந்த பழங்களில் இயற்கையாகவே பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், பிளேட்லெட்டுகள் குறைந்தால், அதை அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய பழங்களை பற்றி இங்கே காணலாம். 

பப்பாளி (Papaya)

டெங்கு பாதிப்பால் குறையும் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க பப்பாளி சிறந்த பழமாக கருதப்படுகிறது. இதில் பப்பயாடின் என்ற என்சைம் உள்ளது. இது இரத்த அணுக்களை உருவாக்க பெரிதும் உதவுகிறது. டெங்கு காய்ச்சலின் போது தினமும் 2-3 பப்பாளி பழங்களை சாப்பிட்டு வந்தால் பிளேட்லெட்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கலாம்.

மாதுளை (Pomegranate)

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. மாதுளை சாப்பிடுவதால் உடலில் உள்ள இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பிளேட்லெட்டுகள் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. டெங்கு காய்ச்சலின் போது தினமும் ஒரு டம்ளர் மாதுளை  பழச்சாறு குடிப்பது நோயாளிக்கு அதிக நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்? இதை தெரிஞ்சிக்கோங்க..

கொய்யா (Guava)

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாத்க்கப்பட்டவர்கள் தினமும் 1-2 கொய்யாப்பழங்களை சாப்பிட்டு வந்தால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 

வாழைப்பழம் (Banana)

வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. டெங்கு காய்ச்சல் வந்தால், அவ்வப்போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதன் காரணமாக உடலில் இருந்து எலக்ட்ரோலைட்டுகள் குறைகின்றன. இதனால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையும். ஆகையால் டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் தினமும் 2-3 வாழைப்பழங்கள் சாப்பிடுவது நல்லது. 

முலாம்பழம் (Muskmelon)

முலாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. டெங்கு காய்ச்சலில், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையும். ஆகையால், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் முலாம்பழம் சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். 

இந்தப் பழங்களைத் தவிர, டெங்கு நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தண்ணீர், சாறுகள் மற்றும் ORS கரைசல் ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அனந்த் அம்பானியின் அசர வைக்கும் வெயிட் லாஸ் ஜர்னி! 108 கிலோ குறைத்தார்-எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News