வாழ்க்கை முறை சார்ந்த பல நோய்களில் ஒன்றான யூரிக் அமில அளவு அதிகரிப்பு என்பது ஒரு தீவிர பிரச்சனை. இதனை சிறிய பிரச்சனை தானே என அலட்சியம் செய்வது எலும்புகளை தாக்குவது மட்டுமல்லாது இதயம், சிறுநீரகம் தொடர்பான பல ஆபத்தான நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவு பெண்களில் 6 mg/dL என்ற அளவை விட அதிகமாகவும், ஆண்களில் 7 mg/dL  என்ற அளவை விட அதிகமாகவும் இருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யூரிக் அமில அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள்


 சிறுநீரகங்கள் உடலில் உள்ள பியூரின்களை உடைக்கும் போது யூரிக் அமிலம் என்னும் கழிவு உருவாகிறது. யூரிக் அமில அளவு உடலில் அதிகரிக்கும் போது, ​​அவை மூட்டுகளில் படிவங்களாக சேர்ந்து வலியை உண்டாக்குகின்றன. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​மூட்டுகளில் வலி, நடப்பதில் சிரமம், மூட்டுகளில் வீக்கம், விறைப்பு, காய்ச்சல், தசைகளில் வலி, பலவீனம் போன்ற உணர்வு ஏற்படலாம். வயது ஏற ஏற இந்தப் பிரச்சனை (Health Alert) தீவிரமடையும் என்பதால், இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது அவசியம்.


யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணம்


புரதங்கள் மற்றும் பியூரின்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடலில் யூரிக் அமில அளவி அதிகரிக்கிறது. பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற உணவுகளில் ப்யூரின்கள் நிறைந்துள்ளன, இது யூரிக் அமில அளவை அதிகரிக்கும். இது தவிர, புற்றுநோய் போன்ற சில கடுமையான நோய்களாலும் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம்.


யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த மருத்துவர் வழங்கும் ஆலோசனை


உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷதாயு ஆயுர்வேதம் மற்றும் பஞ்சகர்மா மையத்தின் இயக்குனர் டாக்டர் அமித் குமார், ஐஏஎன்எஸ் ஊடகத்திடம் பேசுகையில், வயது ஏற ஏற சிறுநீரகங்களால் புரதத்தை முழுமையாக ஜீரணிக்க முடிவதில்லை. இதனால், ப்யூரின்கள் அதிக அளவில் உருவாகி அதனை சிறுநீரகங்கள் உடைக்க முடியாத சூழ்நிலையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது என்றார். இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்றார் அவர்.


மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்


யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்


 யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த, அளவிற்கு அதிக புரத உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக அளவு புரதம் மற்றும் ப்யூரின்கள், யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது தவிர, மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என மருத்துவர் அமித் குமார் அறிவுறுத்துகிறார். உடலை டீடாக்ஸ் செய்யும் பானங்களும் வழக்கமான உடற்பயிற்சியும் யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும்.


உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் அவசியம்


யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்று டாக்டர் அமித் குமார் கூறினார். ஏனெனில் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது. இதனுடன், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவை எடுத்துக்கொள்வதும் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவத உதவும். மேலும் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதும் உடலில் உள்ள புரதங்கள் மற்றும் பியூரின்களின் அளவைக் குறைக்க உதவுகின்றன. குறிப்பாக,  நார்ச்சத்து வைட்டமின் சி, நிறைந்த உணவு பொருட்கள் யூரிக் அமிலக் கழிவை வெளியேற்ற உதவும்.


மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் கட்டுக்குள் கொண்டு வர இந்த எளிய பானங்கள் உதவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ