Vitamin C: வைட்டமின் சி குறைபாடு ஏற்படுத்தும் ஆபத்து! அலாரம் அடிக்கும் அலார்ட்
Vitamin C Deficiency: ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாசவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் சி. இது குறைந்து, உடலில் மாறுபாடுகள் ஏற்படும்போது, உடல் இந்த அறிகுறிகளை காட்டுகிறது
ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாசவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் சி. இது குறைந்து, உடலில் மாறுபாடுகள் ஏற்படும்போது, உடல் இந்த அறிகுறிகளை காட்டுகிறது. வைட்டமின் சி குறைபாடு காரணமாக, உடலில் சில அறிகுறிகள் தோன்றும்போது, அதை சரியான நேரத்தில் கண்டறிந்தால், இந்த குறைபாட்டை நீங்கள் சமாளிக்க முடியும். உடனடியாக சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் நீண்டகால அளவில் உணவில் மாற்றங்களை ஏற்படுத்தி கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
வைட்டமின் சி உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். வலுவான ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி, உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும். அதுமட்டும் அல்ல, பிற நாள்பட்ட நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வைட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத சத்து வைட்டமின் சி. எனவே, நாம் இந்த ஊட்டச்சத்தை பெறுவதற்கு தேர்ந்தெடுத்த சில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி பொதுவாக சிட்ரிக் உணவுகளில் உள்ளது. நீங்கள் சரியான அளவில் வைட்டமின் சி உட்கொள்ளவில்லை என்றால், இந்த குறைபாட்டின் சில அறிகுறிகள் உங்கள் உடலில் தோன்றும். அவற்றைக் கண்டறிவதன் மூலம் வைட்டமின் சி குறைபாட்டைப் போக்கலாம்.
மேலும் படிக்க | கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம்
வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அதன் குறைபாட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிக நோய்வாய்ப்படலாம், ஏனெனில் நீங்கள் தொற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது.
உடல் சோர்வு
வைட்டமின் சி குறைபாடு இருந்தால், எப்போதும் சோர்வாக உணருவீர்கள். வைட்டமின் சி குறைபாடு இரத்த சோகையையும் ஏற்படுத்தும். சில வேலைகளைச் செய்து முடிக்க உங்களுக்கு ஆற்றல் குறைவாக இருப்பதாக தோன்றும். மனநிலையில் எரிச்சல் ஏற்பட்டால், உங்கள் உடலில் வைட்டமின் சி குறைபாடு இருக்கலாம் என்று புரிந்துக் கொள்ளலாம்.
உலர்ந்த சருமம்
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் சி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு தோல் தயாரிப்புகளிலும் வைட்டமின் சி இருப்பதை நீங்கள் காண்பீர்கள். வைட்டமின் சி இல்லாததால் சருமம் வறண்டு சேதமடையும். இந்த குறைபாட்டை போக்க, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
காயங்கள் குணமாவதில் தாமதம்
வைட்டமின் சி குறைந்து போனால், உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் ஆறுவதில்லை. வைட்டமின் சி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடுகிறது, இதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. வைட்டமின் சி கடுமையாக குறையும்போது இந்த அறிகுறி தோன்றும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயை உண்டு இல்லேன்னு ஆக்கும் கிச்சன் கில்லாடி! இது வெங்காயத்தின் மாயஜாலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ