Diabetes And Onion: நீரிழிவு நோய் உலகில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது உடனடியான பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நீண்டகால அளவில் வாழ்க்கையை முடக்கக்கூடியது. உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு நோய் உருவாகிவிட்டது என்றும் சொல்லலாம். தற்போது, நீரிழிவு நோய்க்கு சிகிச்சை இல்லை, ஆனால் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருந்தால், சாதாரணமாக வாழ முடியும். அதனால், நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியங்கள் பரவலாக பின்பற்றப்படுகின்றன. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் முக்கியமானப் பொருட்களில் ஒன்று வெங்காயச் சாறு.
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் உள்ளன. உடலில் குளுக்கோஸை சீராக்க உதவும் குரோமியம் சரியான அளவில் உள்ளது. வெங்காயத்தின் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது, அதாவது அது உடலில் மெதுவாக உறிஞ்சப்பட்டு, இரத்தச் சர்க்கரை அளவில் மாறுதல்கள் ஏற்படுகின்றன.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வெந்நீர் உதவாதா? அதிர்ச்சியூட்டும் தகவல்
வெங்காயத்தின் சாறு, நீரிழிவை கட்டுக்குள் வைத்திருப்பதைப் போலவே, செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள், காலை நேரத்தில் வெங்காய சாறு குடிப்பது நல்ல பலன் தரும். செரிமான அமைப்பு மற்றும் இரத்த சர்க்கரையை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் பண்புகளை வெங்காயச் சாறு கொண்டுள்ளது.
வெங்காயம் முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் சல்பர் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு நல்லது. வெங்காயச் சாற்றை வாரத்தில் இரண்டு நாட்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி வந்தால், முடியின் தரம் மேம்படும்.
வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படி ஒரே ஜூஸில் பல ஆரோக்கியப் பலன்களைக் கொண்டுள்ள வெங்காயச் சாற்றை அடிக்கடி குடித்து உடல் நலத்தை மேம்படுத்துவதுடன், நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
வெங்காய சாற்றை எப்படி தயாரிப்பது என்ற கேள்வி எழுகிறதா? வெங்காயத்தை மிக்ஸியில் அடித்து, அதி, தண்ணீர், உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து, நன்கு கலந்து, குடிக்கவும். வெங்காயத்தின் ஆரோக்கியப் பண்புகள் அனைத்தையும் பெற, வெங்காய ஜூஸ் தயாரித்த உடனே, அதை குடித்து விடவும். நீண்ட நேரம் வைத்த பிறகு, வெங்காய ஜூஸைக் குடித்தால், அதன் நற்பலன்கள் குறைந்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | முதுகுவலிக்கு முதலை ட்ரீட்மெண்ட்! இது சீன மருத்துவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ