நோய்கள் அண்டாமல் இருக்க... இரவு உணவிற்கு பின் வெல்லம் சாப்பிடுங்க...!
இரவு உணவிற்குப் பிறகு வெல்லத்தை உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் மிகவும் நன்மை பயக்கும். இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொள்வோம்.
வெல்லத்தின் நன்மைகள் ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வெல்லம் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் வெல்லம் நிச்சயம் சாப்பிட வேண்டும். உண்மையில் அது உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியது. எனவே, குளிர்காலத்தில் இதை உட்கொள்வது உங்களுக்கு அமிர்தம் போன்றது. இது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. எனவே பலர் பொதுவாக உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவார்கள். உண்மையில், வெல்லம் சர்க்கரையைப் போல சுத்திகரிக்கப்படுவதில்லை. பல சத்துக்கள் இதில் இருப்பதற்கு இதுவே காரணம். புரதம், கால்சியம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து என பல வகையான சத்துக்கள் வெல்லத்தில் உள்ளது. இதில் கொழுப்பு இல்லை, எனவே வெல்லம் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது.
ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக விளங்கும் வெல்லத்தை, நீங்கள் இரவு உணவுக்குப் பிறகு உட்கொள்வதை வழக்கமாக கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health Tips) மிகவும் நன்மை பயக்கும். இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்
வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வெல்லம்
ஆம், வெல்லம் வயிற்றுப் பிரச்சனைகளைச் சமாளிக்க மிகவும் எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும். வயிற்றில் வாயு உருவாவதையும், செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளையும் தீர்க்க இது மிகவும் நன்மை பயக்கும். உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது.
ஜலதோஷத்தை போக்கும் வெல்லம்
குளிர் காலத்தில் அல்லது சளி இருக்கும் போது வெல்லத்தைப் பயன்படுத்துவது உங்களுக்கு அமிர்தம் போல இருக்கும். அதன் வெப்ப தன்மை காரணமாக, இது உங்களுக்கு சளி, இருமல் மற்றும் குறிப்பாக இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதற்கு, வெல்லத்தை பால் அல்லது தேநீரில் பயன்படுத்தலாம். மேலும் நீங்கள் எலுச்சை இஞ்சி சேர்த்த பானமாகவும் தயாரித்து குடிக்கலாம்.
மேலும் படிக்க | காலை உணவாக இவற்றை சாப்பிடுங்க... எடையும் அதிகரிக்காது... வயிறும் நிரம்பும்!
சருமத்திற்கு ஆரோக்கியத்தை காக்கும் வெல்லம்
வெல்லம் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் வராமல், சருமம் பளபளக்கும். இது உங்கள் சரும பிரச்சனைகளை உடலின் உள்ளிருந்து குணப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வெல்லம்
வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் இதயம் தொடர்பான நோய்களைத் தடுப்பதில் நன்மை பயக்கும். சர்க்கரை இதய நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் வெல்லம்
மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், இரவு உணவுக்கு பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தொண்டை வலியை போக்கும் வெல்லம்
வெல்லத்தை இஞ்சியுடன் சேர்த்து சூடாக்கி, வெதுவெதுப்பாக சாப்பிடுவது தொண்டை புண் மற்றும் எரியும் உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதன் மூலம் குரலின் தன்மையும் மிகவும் சிறப்பாக இருக்கும். மூட்டு வலி ஏற்பட்டால், வெல்லத்துடன் இஞ்சியைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் ஒரு துண்டு வெல்லத்துடன் இஞ்சி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தினமும் வெல்லம் எந்த அளவிற்கு சாப்பிடலாம்?
தினமும் சிறிதளவு வெல்லம் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். அதாவது ஒவ்வொரு நபரும் தினமும் சுமார் 20 கிராம் வெல்லத்தை உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கேரட்டில் கூட பக்கவிளைவுகளா!! அதிகமா சாப்பிட்டா ஆபத்து!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ