உலகிலேயே உடல் பருமன் குறைவான இருக்கும் நாடுகளின் முதன்மையானது தென்கொரியா. அங்கு உடல் பருமன் விகிதம் மிக மிககுறைவாக உள்ளது.  ஏனெனில் அவர்கள் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட, கொழுப்பு நிறைந்த அல்லது சர்க்கரை உணவுகளை குறைவாக உட்கொள்கின்றனர், இல்லையென்றால் முழுமையாக தவிர்த்து விடுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம்


அவர்கள் உணவுப் பழக்க வழக்கத்தில் இந்தவகை உணவுகளுக்கு இடமில்லை. இதனால், பெரும்பாலான கொரியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆபத்தான பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்வதில்லை. கொரிய உணவு முறையில் நிறைய காய்கறிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் இருக்கும் நார்ச்சத்து, குறைந்த கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் ஆகியவை ஆரோக்கியமான மற்றும் மெலிதான உடலுக்கு வழிவகுக்கும். இதனை கருத்தில் கொண்டு காய்கறிகளால் தங்கள் உணவு தட்டுகளை நிரப்பிக் கொள்கின்றனர்.


மேலும், கொரியா ஒரு தீபகற்பமாக இருப்பதால், கடல் உணவை அவர்கள் அதிகம் சார்ந்திருக்கின்றனர். அதிக புரதத்தை வழங்கும் மீன்களை அதிகம் உட்கொள்கிறார்கள். ஷெல்ஃபிஷ், ஆக்டோபஸ் மற்றும் வறுக்கப்பட்ட கானாங்கெளுத்தி ஆகியவை கொரியாவில் பிரபலமான கடல் உணவுகளாகும். அவை வயிற்றை நிறைவாக வைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன


கிம்ச்சி ஒரு புளித்த காரமான முட்டைக்கோஸ் டிஸ் ஆகும். இது செரிமான அமைப்பை சமநிலையில் வைத்திருக்கும். இந்த சத்தான உணவை எந்த காய்கறியிலிருந்தும் தயாரிக்கலாம் . கொரியர்கள் ரொட்டியை விட அரிசியை அதிகம் சாப்பிடுகிறார்கள். அரிசி செரிமானத்திற்கு நல்லது மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.


மேலும் படிக்க | TEA Tips: உங்களுக்கு டீ பிடிக்கலாம்: ஆனால் தேநீருக்கு இந்த பொருட்களை பிடிக்காது


அவர்கள் எப்போதும் பாரம்பரிய உணவைத் தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாகவே உடல் பருமன் இல்லாமல் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதுவே கொரியர்கள் ஒல்லியாக இருப்பதன் ரகசியமாகும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR