Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம்

Soyabean Health Benefits: தினசரி உணவில் சோயாவை சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். சோயாவின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2022, 11:02 AM IST
  • சோயாவில் உள்ள புரோட்டின் கோழியில் உள்ள புரத சத்துக்கு சமமானது
  • தரமான நார்ச்சத்து கொண்டது சோயா
  • சோயா உண்டால் உடல் எடை குறையும்
Soya Fiber: உடல் எடை குறைய வைக்கும் சோயாவின் புரோட்டின் மாயம் title=

சைவ உணவு உண்பவர்களுக்கு, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துபவர்களுக்கு சோயா சிறந்த தேர்வு. அதிக புரோட்டின் இருப்பதால், அசைவ உணவு உண்பவர்கள் உட்பட ஃபிட்னஸ் பிரியர்கள் மத்தியில் சோயா மிகவும் பிரபலமானது. சோயா துண்டில் கோழியின் மார்பகத்தில் உள்ள புரதத்திற்கு சமமான அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. சில சோயா மீல் பிராண்டுகள், தங்கள் தயாரிப்பில் கோழி மற்றும் முட்டைகளில் இருப்பதை விட அதிக புரதம் இருப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் சோயாவில் புரதம் தவிர, சோயாவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. 

அதேபோல் கலோரிகளும் கணிசமான அளவில் இருப்பதால், சோயாவை அளவோடு உண்ண வேண்டும். சோயா மாவிலிருந்து சோயாபீன் எண்ணெயைப் பிரித்தெடுத்த பிறகு தயாரிக்கப்படுகிறது சோயா உருண்டைகள். உங்கள் உணவில் சோயாவை சேர்த்துக்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும்.  

மேலும் படிக்க | உங்களுக்கு டீ பிடிக்கலாம்: ஆனால் தேநீருக்கு இந்த பொருட்களை பிடிக்காது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சோயா துண்டுகளில் அதிக புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், அவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். சோயா கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும் அற்புதமான உணவாகும்.

எடை இழப்பு
நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கச் செய்கிறது. இதனால்,  அடிக்கடி சாப்பிடும் ஆர்வம் குறைவதால், உடல் எடையைக் குறைக்க சோயா உதவியாக இருக்கிறது.  

மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்கிறது
சோயா துண்டுகளில் காணப்படும் ஐசோஃப்ளேவோன்ஸ், ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன், ஹாட் ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள் போன்ற மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதில் சோயா உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.   

செரிமானத்தை மேம்படுத்துகிறது
சோயாவில் நார்ச்சத்து போதுமான அளவு இருக்கிறது. சோயாவின் தரமான நார்ச்சத்தானது,  உடலில் செரிமானத்தை அதிகரிகிறது. மேலும், சோயாவை வழக்கமாக உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும். சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News