நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?
கேரளாவில் `நிபா` வைரஸால் உயிரிழந்த சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டதை அறிந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய எடுத்து சென்றுள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் 'நிபா' வைரஸால் உயிரிழந்த சிறுவன் ரம்புட்டான் பழங்களை சாப்பிட்டதை அறிந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய எடுத்து சென்றுள்ளனர்.
கோழிக்கோட்டில் 'நிபா' வைரஸால் சிறுவன் உயிரிழந்ததையடுத்து சிறுவனின் தாய் மற்றும் இரு சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, வௌவால் மற்றும் பன்றி மூலம் மட்டுமே 'நிபா' வைரஸ் பரவி வந்த நிலையில் சிறுவனின் வீட்டில் ஆடுகள் வளர்க்கப்படுவதால், அவற்றிற்கு பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஆடுகளை மேய்க்க சிறுவன் சென்ற வனப்பகுதியில் வௌவால்கள் இருப்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, சிறுவனின் வீட்டை ஆய்வு செய்த மத்தியக்குழு அங்கிருந்த ரம்புட்டான் மரத்தை பார்த்துள்ளனர். ரம்புட்டான் பழங்களை சிறுவன் சாப்பிட்ட தகவல் அறிந்ததும் அதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய எடுத்து சென்றுள்ளனர். கேரளாவில் 'நிபா' வைரசுக்கு சிறுவன் உயிரிழந்ததையடுத்து மத்திய மருத்துவ நிபுணர்க் குழு திருவனந்தபுரத்துக்கு விரைந்துள்ளது.
நிபா வைரஸ் பரவுவது குறித்து கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26, ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் தாக்குதலுக்கு 74 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR