நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவும்  'நாக்கு' என்பது, நம் உடலின் மற்ற உறுப்புகளுக்கு இணையான  முக்கியத்துவம் வாய்ந்தது. நம்முடைய நாக்கின் நிறத்தை வைத்தே நம் உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டுபிடித்துவிட முடியும். நாக்கு என்ன நிறத்தில் இருந்தால் உடலின் எந்த பாகங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாக்கின் நிறம் சிலருக்கு கறுப்பாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள், இதன் காரணமாக அவர்கள் பின்னர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.


நாக்கின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை எடுத்து கூறுகிறது. உங்கள் நாக்கின் நிறம் மாறியிருந்தால் அது பல நோய்களையும் குறிக்கிறது. முற்காலத்தில் வைத்தியர்கள், நாக்கு மற்றும் கண்களைப் பார்த்துதான் நோயை அறிந்து கொள்வார்கள். நாக்கின் நிறம் மாறுவதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். பல சமயங்களில் நாக்கின் நிறம் மருந்து அல்லது எந்த உணவின் காரணமாக மாறுகிறது, ஆனால் அது சிறிது நேரத்திற்கு தான் அப்படி இருக்கும்.  உங்கள் நாக்கின் நிற மாற்றம் நீண்ட நேரம் இருந்தால், அதில் சிக்கல் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். அதனால் நாக்கின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


ALSO READ | Omicron: Immunity அதிகரிக்க காட்டும் அதீத ஆர்வம் கல்லீரலை டேமேஜ் செய்யும்..!!


பொதுவாக நாக்கின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு. சாதாரண நாக்கின் அமைப்பில் நிறம் சற்று மங்கலாக இருக்கும். உங்கள் நாக்கும் இப்படி இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.


கறுப்பு நிற நாக்கு புற்றுநோயின் அறிகுறி!


கறுப்பு நாக்கு புற்றுநோயைப் போன்ற ஒரு தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர அல்சர் அல்லது பூஞ்சை தொற்று ஏற்பட்டாலும் நாக்கின் நிறம் கருப்பாக மாற ஆரம்பிக்கும் என நம்பப்படுகிறது. பெரும்பாலும் புகை பிடிப்பவர்களின் நாக்கின் நிறமும் கருப்பாக மாறிவிடும்.


வெள்ளை நிற நாக்கு 


இது தவிர, நாக்கின் நிறம் வெண்மையாக மாறியிருந்தால், உங்கள் வாய் சுத்தமாக இல்லை என பொருள்.  அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் குறைகிறது என்பதற்கான அறிகுறி இது .உடலில் நீரிழப்பு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். சில சமயங்களில் காய்ச்சலால் நாக்கின் நிறம் வெண்மையாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் நாக்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


மஞ்சள் நிற நாக்கு


சில நேரங்களில்  நாக்கு மஞ்சள் நிறமாக மாறும். இதற்குக் காரணம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததே. இது தவிர, செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகள், கல்லீரல் அல்லது வயிறு பிரச்சனைகள் காரணமாக, நாக்கின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது.


ALSO READ | பகீர் தகவல்! அளவிற்கு மிஞ்சிய Vitamin D மத்திரைகளால் மன நோய் ஏற்படலாம்!


பழுப்பு நிற நாக்கு


அதிகப்படியான காஃபின் பழுப்பு நிற நாக்கை ஏற்படுத்துகிறது
அதிக காஃபின் உட்கொள்பவர்களுக்கு பழுப்பு நிற நாக்கு இருக்கும். புகைப்பிடிப்பவர்களின் நாக்கின் நிறமும் பழுப்பு நிறமாக மாறும். புகைபிடிப்பவர்களின் நாக்கில் பழுப்பு நிறத்தின் நிரந்தர அடுக்கு படிகிறது.


ALSO READ  | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


சிவப்பு நிற நாக்கு


உங்கள் நாக்கின் நிறம் விசித்திரமான முறையில் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியிருந்தால், உடலில் ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். 


நீலம் மற்றும் ஊதா நிற நாக்கு


நாக்கின் நிறம் நீலம் அல்லது ஊதா நிறமாக இருந்தாலும் பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இதன் பொருள் உங்களுக்கு இதய பிரச்சினைகள் இருக்கலாம். இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாமல் போனால் அல்லது இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறையத் தொடங்கினால், நாக்கின் நிறம் நீலம் அல்லது ஊதா நிறமாக மாறும்.


ALSO READ | நோய் எதிர்ப்பு சக்தி தரும் Chyawanprash சாப்பிடுவதற்கான சரியான நேரமும், முறையும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR