புது தில்லி: இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இதே நிலைதான். வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என்பதோடு, கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிகின்றனர். எனவே, உடலில் வைட்டமின் டி குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால், விட்டமின் டி (Vitamin D) குறைபாட்டை போக்க மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின் டி இன்றியமையாதது என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!
உடலில் வைட்டமின் டி அளவு 30 முதல் 60 ng/ml வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது தீவிர உடல் பிரச்சனையாக மாறும். வைட்டமின் டி குறைபாட்டால் (Vitamin D Deficiency) ஏற்படும் பாதிப்பை பற்றி மருத்துவர்களிடம் பலமுறை கேட்டிருப்பீர்கள். ஆனால் உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை டாக்டர் ரேணு சாவ்லா தெரிவித்தார்.
வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் சோர்வு:
வைட்டமின் டி நம் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் கிரகித்து கொள்ள உதவுகிறது. உடலுக்கு 8.5 முதல் 10.8 mg/dL கால்சியம் மட்டுமே தேவை. கால்சியம் அதிகமானால், நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படும். வயிற்றில் வலி, மலச்சிக்கல், சோர்வு போன்றவை ஏற்படும். அதிக அளவில் சிறுநீர் கழித்தல், பசியின்மை, சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் இதயம் தொடர்பான நோய்களூம் ஏற்படும். அதிகப்படியான கால்சியம் வாழ்க்கையை பாதிக்கலாம்.
ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!
மனச்சோர்வு மற்றும் மன நோய்:
உடலில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், கால்சியமும் அதிகமாக உள்ளது. இது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. மனச்சோர்வு, குழப்பம் மற்றும் மனநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. வழக்கத்திற்கு மாறாக மன உளைச்சல் இருந்தாலோ, தேவையில்லாத கலக்க ஏற்பட்டாலோ, அல்லது சிறிய விஷயம் கூட உங்களை மனச்சோர்வடையச் செய்து குழப்பத்தில் ஆழ்த்தினாலோ, உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதித்து, விட்டமின் டி அதிகம் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பு:
அதிகப்படியான வைட்டமின் டி காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுவதால், உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் சுருங்கி, சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கப்படும்.
பசியின்மை மற்றும் வாந்தி:
வைட்டமின் டி அளவு அதிகமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். பசியின்மை ஏற்படுவதோடு, வாந்தி, மயக்கம் வருவது போன்ற உணர்வும் பல சமயங்களில் ஏற்படும்.
ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR