புற்றுநோய் செல்களை அழிக்க சட்டீஸ்கர் மாணவியின் புதிய ஃபார்முலா!
புற்றுநோய் செல்களை அழிக்க புதிய ஃபார்முலா-வை கண்டறிந்து சட்டீஸ்கர் மாணவியின் முயற்சியில் இறங்கியுள்ளார்!
புற்றுநோய் செல்களை அழிக்க புதிய ஃபார்முலா-வை கண்டறிந்து சட்டீஸ்கர் மாணவியின் முயற்சியில் இறங்கியுள்ளார்!
உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொண்டேதான் வருகிறது. இந்த நோய்க்குத் தீர்வு காண மருத்துவ உலகில் கடுமையான ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்தாலும் தீர்வு இன்றும் எட்டபாடாமல் தான் இருக்கிறது.
இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மம்தா திரிபாதி என்ற மாணவி, புற்றுநோயை உருவாக்கும் செல்களை முற்றிலுமாக அழிக்கக்கூடிய புதிய மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர், ராய்ப்பூர் பண்டிட் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி பணியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட இவர், இதற்கான புதிய ஃபார்முலா மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளார்.
இந்த ஆராய்சி தொடர்பாக பேசிய அவர், `புற்றுநோயை உருவாக்கும் செல்களை, அழிக்க புதிய ஃபார்முலா மூலம் மூலக்கூற் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளேன். இது, புற்றுநோய் செல்களை 70 சதவிதகம் முதல் 80 சதவிகிதம் வரை அழித்து, அதனை மேலும் பரவவிடாமல் நோயைக் குணப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மூலக்கூறுகளில் குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை இருக்கிறது. இதனை, பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சோதனை வெற்றி பெற்றால், இது கீமோ தெரப்பிக்கு மாற்றுச் சிகிச்சையாக இருக்கும்' என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்!