Singapore COVID-19 Cases: வேகமாக பரவும் கே.பி. 2.. ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய அப்டேட்

New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.

Written by - Shiva Murugesan | Last Updated : May 21, 2024, 04:49 PM IST
  • மே 5 முதல் 11 வரை 25,900 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகி இருக்கிறது -சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்.
  • கொரோனாவின் முக்கிய வகையான FLiRT சிங்கப்பூரில் வேகமாக அதிகரித்து வருகிறது.
  • ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் மனநிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் இல்லை.
Singapore COVID-19 Cases: வேகமாக பரவும் கே.பி. 2.. ஊரடங்கு உத்தரவு குறித்து முக்கிய அப்டேட் title=

Singapore COVID-19 Cases: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி மற்றும் இறுதிக்குள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. மே 5 முதல் 11 வரை 25,900 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகி இருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் முகமூடிகளை அணிந்து வெளியே செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு போடப்படுமா?

சிங்கப்பூர் நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், 'நாங்கள் இன்னும் கோவிட் அலை பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் அது தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் பெறும்' எனக் கூறியுள்ளார். சுகாதார அமைச்சர் கூறியதை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. கொரோனாவின் முக்கிய வகையான FLiRT சிங்கப்பூரில் வேகமாக அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

தற்போது எந்தவிதமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் மனநிலையில் சிங்கப்பூர் அரசாங்கம் இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் கூறியுள்ளார். ஏனெனில் கோவிட்-19 சிங்கப்பூரில் உள்ளூர் நோயாகக் கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பு மேலும் அதிகரித்தால், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிங்கப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அதனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கோவிட்-19 தொற்று இங்கு வேகமாகப் பரவுவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க - Covaxin கொரோனா தடுப்பூசி வைரஸை தடுத்தாலும் பக்கவிளைவுக்கும் பஞ்சமில்லை! அதிர்வூட்டும் ஆய்வு!

சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ்  கே.பி. 2

கொரோனா தொடரின் புதிய மாறுபாடு FLiRT சிங்கப்பூரில் கோவிட் அதிகரிப்பதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. 2 சிங்கப்பூரில் வெளியாகும் செய்திகளின் அறிக்கைபடி, சிங்கப்பூரில் தற்போது மூன்றில் இரண்டு பங்கு பாதிப்பு KP.1 மற்றும் KP.2 வகைகளை சார்ந்து இருக்கிறது. புதிய வகை கே.பி. 2 (KP.2) மாறுபாட்டை மே 3 வரை கண்காணிக்க உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகையான KP.2 மற்றும் KP.1 வகைகள் FLiRT ஐ விட குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது. மேலும் இது குறைவான வேகத்தில் பரவுகிறது எனவும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை மே 5 மற்றும் 11 க்கு இடையில் 25,900 ஆக இருந்தது. இது முந்தைய வாரத்தில் 13,700 ஆக இருந்தது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சக தரவுகளின்படி. ஒரு வாரத்திற்கு முன்பு, தினமும் 181 கோவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவற்றின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்

இந்தியாவைப் பொறுத்த வரை, தற்போது இந்தியாவில் FLiRT தொற்று பதிப்பு 91 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது, ​​இந்த மாறுபாட்டின் வெவ்வேறு தீவிரத்தன்மை அல்லது அறிகுறிகள் இந்தியாவில் தெரியவில்லை. மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் FLiRT தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளன. 

எனினும் சிங்கப்பூரில் பரவி வரும் KP 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News