ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்!

Top 10 Must-Know Facts About Automatic Cars : இப்போது எல்லோரும் ஆட்டோமேடிக் கார்கள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த கார்கள் குறித்த அடிப்படையான 10 விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 21, 2024, 01:56 PM IST
  • ஆட்டோமேடிக் கார்கள் பற்றிய முக்கிய தகவல்
  • ஆட்டோமேடிக் கார்களை எப்படி இயக்க வேண்டும்
  • முந்துவதற்கு முன்பு நீங்கள் ஏன் யோசிக்க வேண்டும்
ஆட்டோமேடிக் கார்கள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 10 விஷயங்கள்! title=

ஆட்டோமேடிக் கார்கள் மிக குறைந்த விலையில் இருப்பதால், பெரும்பாலான இளம் வயதினர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட கார்களுக்கு மாறி வருகின்றனர். பல ஏஎம்டி கார்கள் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம், மிக எளிமையாக கார்களை இயக்கலாம், ஆட்டோமேடிக் இயக்கம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது. இதற்காகவே மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து மக்கள் ஆட்டோமேடிக் கார்களுக்கு மாறுவதற்கான முக்கிய காரணியாகும். அந்தவகையில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்களை பற்றிய 10 முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம். 

1- ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கும், ஆட்டோமேடிக் கார்களுக்குமே வித்தியாசம் உள்ளது, மற்ற ஆட்டோமேடிக் மேனுவல் கார்களைப் போல ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் செயல்படாது. கார்கள் இயக்கத்திலேயே இருக்கும் எளிமை இரண்டு கார்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்டும். அந்த கார்களை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் புதிதாக இந்த வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். வித்தியாசத்தையும் உடனடியாக உணர்வார்கள்.

2- மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரைப் போல் ஏஎம்டி கார்களில் கிளட்ச் இல்லை. மேனுவல் கார்களில் நீங்கள் கிளட்சை தவறாமல் நிர்வகிக்க வேண்டும், AMT இல், கார் உங்களுக்காக கிளட்சை கவனித்துக்கொள்கிறது. AMT perse என்பது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனைக் குறிக்கிறது. டிரான்ஸ்மிஷனின் செயல்பாடு அப்படியே உள்ளது, இது கிளட்ச் மற்றும் கை வழியாக கியர்களை மாற்றுவதன் மூலம் நீங்கள் ஓட்டுவதை மிகவும் எளிதாக்குகிறது. கியர் இல்லாத ஸ்கூட்டரை ஓட்டுவதை விட இது உண்மையில் எளிதானது.

3- வாங்க எளிதானது, பராமரிக்க எளிதானது கார்களின் தானியங்கி பிரிவில், AMTகள் மிகவும் மலிவு விருப்பமாகும். மேனுவல் கியர்பாக்ஸில் சில ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் செயல்பாடுகள் அடிப்படையில் AMT கார்களிலும் இருக்கும். இதற்கு காரணம் இரண்டுக்கும் பெரிய டிரான்ஸ்மிஷன் வித்தியாசமும், பொருட் செலவும் தேவையில்லை. கூடுதல் சில அம்சங்களை மட்டும் சேர்த்தால் போதும். அதனால் தான் AMT கியர்பாக்ஸ் பல பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளில் கிடைக்கிறது. 

மேலும் படிக்க | TVS Apache RTR 160 4V பிளாக் எடிஷன் : டாப் 5 சிறப்பம்சங்கள் - விலை, மைலேஜ் தெரிஞ்சுகோங்க பாஸ்

4- நல்ல எரிபொருள் திறன் வழக்கமான ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களுடன் ஒப்பிடும்போது, AMTகள் அதிக எரிபொருள் திறன் கொண்டவை. 

5- ஒவ்வொரு நாணயத்துக்கும் மற்றொரு பக்கம் இருப்பது என்பது போல, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களில் இருந்து  AMT கார்களுக்கு மாறுகிறீர்கள் என்றால் பார்க்கிங்கில் அல்லது மலையேறும்போது, மலை இறங்கும்போதும் இந்த கார்கள் அந்த கார்களைப் போன்ற  சிறப்பாக இருப்பதில்லை. அதனால் AMT கார்கள் உபயோகிப்பவர்கள் ஹேண்ட்பிரேக்கைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6- உங்கள் காரைக் கட்டுப்படுத்தவும் & கியர்களை மாற்றவும் AMT கார்களில் பெரும்பாலானவை வழக்கமான ஸ்டிக்கைப் பெறுகின்றன, உங்கள் வாகனத்தை கைமுறையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த Take-things in your hands option பொதுவாக பல வழக்கமான தானியங்கி கார்களில் வழங்கப்படுவதில்லை. இந்த ஆப்சனுடன் இருக்கும் கார்கள் வாங்குவது சிறப்பு.

7- நாளுக்கு நாள் AMTகள் மேம்பட்டு வருகின்றன, அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஹில் ஹோல்ட் போன்ற அம்சங்களை வழங்கும் AMTகளை நீங்கள் வாங்கலாம் (டாடா நெக்ஸான் & ரெனால்ட் டஸ்டர் போன்ற கார்களில் இது கிடைக்கிறது). ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துவதைத் தவிர, சாய்வான மேற்பரப்பு/நிலப்பரப்பில் காரை நிறுத்தும்போதும் ஓட்டுநரை ஓய்வெடுக்க இது அனுமதிக்கிறது.

8- போக்குவரத்தில் ஆட்டோமேடிக் கார்கள் இப்படி இயங்கும் என்ற கவலை பலருக்கும் இருக்கிறது. இப்போது நம் நாட்டில் விற்கப்படும் ஏடிஎம் கார்களில் ‘க்ரீப்’ என்ற அம்சம் வருகிறது. இந்த ‘க்ரீப்’ அம்சம், டிராஃபிக்கில் இருக்கும் போது, ஆக்ஸிலரேட்டரில் கால் வைக்காமல் மெதுவாக நகரும். கடுமையான போக்குவரத்து சூழ்நிலைகள் எளிதாக வாகனத்தை இயக்க முடியும். உங்கள் கார் முதல் கியரில் இருந்தாலே போதும், அதுவே மெதுவாக நகரும். 

9- மலையில் இருந்து கீழ்நோக்கி வாகனம் ஓட்டுவது ஒரு சவாலான பணியாகும், மேனுவல் கார்களில் எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது மற்றும் கீழ்நோக்கி வாகனம் ஓட்டும்போது அல்லது குறைந்த தூரத்தில் காரை நிறுத்தும்போது நிறைய பேர் அதை நம்புகிறார்கள். ஆனால், AMT கார்கள் கிளட்ச்சின் கட்டுப்பாடு உங்களிடம் இருக்காது. அதாவது நீங்கள் எஞ்சின் பிரேக்கிங் சிஸ்டம் பெறவில்லை. எனவே இப்படியான சூழ்நிலைகளில் நீங்கள் manual modeக்கு மாறலாம். எனவே உங்கள் காரைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சரிசெய்ய வேண்டும்.

10-AMT கார்களில் சாலையில் செல்லும்போது நீங்கள் முந்துவதற்கு முன் யோசியுங்கள், AMT கார்களைப் பொறுத்தவரை சில சிக்கல்கள் இதில் இருக்கின்றன. மேனுவல் மோடுக்கு மாறுவதற்கு உங்களிடம் ஆப்சன் இருக்கும்போது, ஆட்டோமேடிக் ஆப்சனில் முந்தினால் கார் எதிர்பார்க்கும் வேகத்தில் முன் செல்லாது. மந்தமாக இருக்கும். அது உங்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறலாம். அதனால் காரின் முழு செயல்பாட்டையும் அறிந்து கொண்டு, ஒரு வாகனத்தை முந்துவது சிறந்தது. 

மேலும் படிக்க | Maruti Swift : 32 கிமீ மைலேஜ் கொடுக்கும் புதிய ஸ்விப்ட் கார்! பிரளயமே கிளம்பிருச்சு - விலை என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News