Covaxin: மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த பாரத் பயோடெக்கிற்கு DCGI அனுமதி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) - பாரத்- பயோடெக் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் என்னும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) - பாரத்- பயோடெக் இணைந்து தயாரித்துள்ள கோவாக்சின் என்னும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
அக்டோபர் 2 ஆம் தேதி, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பாரத் பயோடெக் (Bharat Biotech) 3 ஆம் கட்ட சோதனைகளை நடத்த அனுமதி கோரி DCGI-க்கு விண்ணப்பித்திருந்தது.
முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தொடர்பான தரவுகளை மதிப்பிட்ட பின்னர் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) நிபுணர் குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இறுதி ஒப்புதலை பெற இந்த பரிந்துரை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (DCGI) அனுப்பப்பட்டது
இந்த ஆய்வில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,500 பேர்களிடம் நடத்தப்பட்டது. டெல்லி, மும்பை, பாட்னா மற்றும் லக்னோ உட்பட 10 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் நடத்தப்படும் என்றும் நிறுவனம் தனது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம், DCGI தனது COVID-19 தடுப்பூசியின் கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளை நடத்த பாரத் பயோடெக்கிற்கு அனுமதி அளித்தது.
இது தவிர, சைடஸ் காடிலா லிமிடெட் (Zydus Cadila Ltd) உள்நாட்டில் தயாரித்துள்ள தடுப்பு மருந்தும், மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு இரண்டாம கட்ட பரிசோதனையில் உள்ளது
Oxford கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிப்பதற்காக அஸ்ட்ராசெனெகாவுடன் (AstraZeneca) கூட்டு சேர்ந்துள்ள புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) , இந்தியாவில் 2 மற்றும் 3ம் கட்டமாக மனிதர்களுக்கு கொடுத்து மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
ALSO READ | கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பைக் குறைக்க CBD உதவும்: ஆய்வு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR