இந்தியாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுன்  அமலில் உள்ளது. மூன்றாக கட்ட அன்லாக் தொடங்கிய நிலையிலும் பல பகுதிகளில், இன்னும் பொது முடக்கம் தொடர்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்த லாக்டவுன் கால கட்டத்தில், மக்கள் அதிகம் வாங்கிய பொருட்கள் என்னனென்ன என்பதை தெரிந்து கொண்டால் ஆச்சர்யப்படுவீர்கள். 


ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..


இது கொரோனா காலம் என்பதால், மக்களுக்கு கொரோனா தொற்று பயம் அதிகமாகவே இருக்கிறது. அதோடு மக்கள் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு செய்திகள், அதை தடுக்கும் விதம் குறித்து அனைத்து வகையிலும், ஊடகங்கள், சமூக ஊடகங்கள், செய்தி தாள்கள் என அனைத்தும், போட்டி போட்டுக்  கொண்டு செய்திகளையும் தகவல்களையும்  தருகின்றன. 


கொரோனாவில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது. ஏனென்றால் அதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 


லாக்டவுன் சமயத்தில் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிக அளவில் சயவன்பிராஷ் என்னும் லேகியத்தை அதிகம் வாங்கியுள்ளனர்.


ALSO READ | நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covid-19 தடுப்பூசி வெறும் ₹.225 மட்டுமே...!


உடல் நிலைக்கு அடுத்தபடியாக நனது தோற்றத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்பதும் முக்கியம். தலைமுடியை ட்ரிம் செய்து கொள்ள கூட முடியாமல் சலூன்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. அதனால், ட்ரீம்மிங் பொருட்கள் விற்பனை மிகவும் அதிகரித்தது.  


அதே போல், மேகி மற்றும் பார்லி ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகியுள்ளன. உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், தனியாக இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிலர் எளிதாக சமைத்து உண்ணும் மேகியை அதிகம் வாங்கியுள்ளனர். 


பார்லி ஜி பிஸ்கெட்டுகள் என்பது எந்த நேரத்திலும் கை கொடுக்கும் உணவு பொருள் என்பதால் அதன் விற்பனையும், இந்த லாக்டவுன் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.