மதுவுக்கும் உயிருக்கும் சம்மந்தம் இருக்கு: ஆய்வில் புது தகவல்..!
உலகம் முழுவதும் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.
உலகம் முழுவதும் இன்று போதையால் தத்தளிக்கிறது. இங்குள்ள மக்களில் பலர் மது இல்லாத நாளே இல்லாமல்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் உடலில் உரம் இருக்கும் வரைதான் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. உடலில் பலம் குறைய குறைய மதுவின் பாதிப்புகள் அதிகமாகி விடும்.
இந்த ஆய்வுக்காக மது அருந்தும் எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களிடம், அவர்கள் எவ்வளவு மது அருந்துகிறார்கள் மற்றும் எப்போதேல்லாம் அருந்துகிறார்கள் என்பது குறித்து கணக்கெடுப்பு ஒன்றினை எடுத்துள்ளனர்.
ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகளவு குடிப்பதற்கு ஆதரவாக இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே சமயம், சில புற்றுநோய்கள், இதயம் மற்றும் கல்லீரல் நோய் உட்படப் பல ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு மது அருந்துவது வழிவகுக்கிறது என இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவபர்களை விட, வாரத்திற்கு முன்று முதல் நான்கு முறை மிதமாக மது அருந்தும் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 32 சதவிகிதமும், ஆண்களுக்கு 27 சதவிகிதமும் குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மது அருந்துதல், சர்க்கரை நோயில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மட்டும் பேசுவது மக்களுக்கு உதவும் விதமாக இல்லை. மது அருந்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல எண்ணிக்கையிலான நோய்கள் ஏற்படுகின்றன.
சில நாட்கள் மது அருந்தாமல் இருப்பதுடன், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்களில் ஆண்களும் பெண்கள் 14 யூனிட்களுக்கும் அதிமாக மதுக்களை அருந்தக் கூடாது. அல்லது 10 சிறிய கோப்பையிலான வைன்களை அருந்தலாம் என மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
எவ்வளவு குடித்திருக்கிறோம் என்பதை மக்கள் நினைக்கும் போது, இந்த நோய்கள் குறித்தும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என போதை மருந்துகள், மது, புகையிலைக்கான இங்கிலாந்து பொது சுகாதார இயக்குநர் ரோசான்னா ஓகார்னர் கூறுகிறார்.
tஅமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1700 பேரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர்.
இவர்களில் நாளொன்றுக்கு 2 கிளாஸ்களுக்கு மிகாமல் ஒயின் அல்லது ஆல்கஹால் அடங்கிய இதர மது வகைகளை மிதமாக குடித்து வந்தவர்களின் மரண விகிதம் சுமார் 18 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளதாக இந்த ஆய்வு குழுவின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான கிளாடியா காவாஸ் குறிப்பிட்டுள்ளார்.