பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகளில் தாவர வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பிற நட்ஸ் வகைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  நட்ஸ் வகைகளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைப்பதோடு உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்ஸ் மற்றும் பார்லியில் 'பீட்டா குளுக்கன்' எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.  ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரையக்கூடிய நார்ச்சத்தை உட்கொண்டால் உங்கள் எல்டிஎல் கொழுப்பு குறைகிறது.  இதனுடன் பெர்ரி அல்லது வாழைப்பழங்கள் போன்ற பழங்களைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து அளவை அதிகரித்து கொழுப்பை குறைக்கலாம்.


மேலும் படிக்க | Grape Juice: திராட்சை பழச்சாறு ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா: தெரியாம போச்சு


மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இரத்த ட்ரைகிளிசரைடுகள், இரத்த அழுத்தம், இரத்த உறைவு ஆகியவற்றைக் குறைக்கும்.  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எல்டிஎல் கொழுப்பின் அளவை பாதிக்காது. இது கொழுப்பை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அவோகேடோஸ் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ஆராய்ச்சியின் படி, அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்கள் உணவில் ஒரு நாளைக்கு ஒரு அவோகேடோஸ் பழத்தையாவது சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களின் எல்டிஎல் கொழுப்பின் அளவு குறைகிறது.  இதனை சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களில் சேர்த்து சாப்பிடலாம்.


பீன்ஸ் குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்தது.  கரையக்கூடிய நார்ச்சத்து மொத்த மற்றும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் கொழுப்பின் அளவைக் குறைப்பதால், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உறிஞ்சுதலைத் தடுக்க குடலில் ஒரு ஜெல்லை உருவாக்குகிறது.  கிட்னி பீன்ஸ் முதல் பருப்பு, கார்பன்சோஸ், கருப்பு கண் பட்டாணி போன்றவற்றை சாப்பிடலாம்.


மேலும் படிக்க | Weight loss By Walnuts: உடல் எடையை குறைக்க வால்நட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR