மழைகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 4 பழங்கள்
மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பருவமழை தொடங்கியுள்ளதால் தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரித்துள்ளது. இதனால் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் தொற்றுநோய்களின் ஆபத்துக்கு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே இந்த காலகட்டத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பழங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஆப்பிள்
ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் க்வெர்செடின் எனப்படும் ஃபிளாவனாய்டுகள் ஏராளமாக உள்ளன. இது எந்த நோயையும் தடுக்கும். அதே வேளையில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. ஆப்பிளில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் செஞ்சுடாதீங்க!
மாதுளை
மாதுளையில் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. க்ரீன் டீயை விட மாதுளை நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. குடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும், செரிமானத்திற்கும் உதவுகிறது.
பேரிக்காய்
நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதன் தோல்களில் வைட்டமின் சி மற்றும் அழற்சி எதிர்ப்பு ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது உங்களை தொற்று ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும்
மேலும் படிக்க | Male Fertility: விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவை அதிகரிக்கும் உணவுகள்
(பின் குறிப்பு: இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. மருந்து அல்லது சிகிச்சைக்கு மாற்று இல்லை. ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்)