யூரிக் அமிலம் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பாதங்களில் அதிக பிரச்சனை ஏற்படும் சில நோய்களில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பும் மிக முக்கியமாகும். யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு நடப்பதில் சிரமம் மற்றும் கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இது கீல்வாதம் போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. பொதுவாக யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் பியூரின்கள் அதிகம் உள்ள சில உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒரு சில காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளில் பியூரின் எனும் சேர்மம் அதிகமாக இருக்கும். இவ்வகை உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன. அதேபோல் சிலருக்கு அதிக அளவு யூரிக் அமிலம் இரத்தத்தில் சேரும். இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. பரம்பரை நோய், மோசமான சிறுநீரக செயல்பாடு, உடல் பருமன், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் போன்ற பல காரணங்களால் இது நிகழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது மூட்டு வலி மற்றும் மரத்துப்போதல், மூட்டுகளில் வீக்கம் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகளைத் தடுக்க, பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம். உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மற்றும் நிறைய தண்ணீர் குடிப்பதும் முக்கியம். எனவே எந்தெந்த உணவுகள் யூரிக் அமிலத்தின் அளவை வேகமாக அதிகரிக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | உணவே மருந்து: மூல நோய்க்கு முடிவு கட்டும் ‘சில’ உணவுகள்!


1. கடல் உணவு: மீன்கள் ஆரோக்கியமான உணவு தான். இருப்பினும் ஒரு சில கடல் உணவுகளில் பியூரின் அளவுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக இறால், சூறை மற்றும் மட்டி போன்ற கடல் உணவுகளில் பியூரின் அதிகமாக காணப்படுகிறது. இவை உங்கள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கும் என்பதால் இவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது.


2. மது அருந்துதல்: பீர், ஓட்கா அல்லது விஸ்கி போன்ற மதுபானங்களும் கீல்வாதத்தைத் தூண்டுலாம். எனவே யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் மதுவிலிருந்து விலகி இருக்க வேண்டும். 


3. சர்க்கரை பானங்கள்: சோடா, பழச்சாறுகள் மற்றும் பிற சர்க்கரை பானங்கள் எடை அதிகரிக்க வழிவகுக்கும், இது யூரிக் அமில அளவை அதிகரிக்கும்.


4. பதப்படுத்தப்பட்ட உணவு: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சர்க்கரை, உப்பு மற்றும் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கக்கூடிய பிற சேர்க்கைகள் இருக்கக்கூடும். எனவே முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இதய தமனிகளில் படிந்துள்ள கொலஸ்டிராலை கரைக்கும் ‘சில’ ஊற வைத்த உலர் பழங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ