மூல நோய் அல்லது பைல்ஸ் என்பது வலிமிகுந்த நோயாகும். இதனால் மலக்குடலில் கட்டிகள் அல்லது இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இந்த நோய் முக்கியமாக மலச்சிக்கலால் ஏற்படுகிறது. மூல நோய் உள்ள நோயாளிகளுக்கு மலம் கழிக்கும் போது கடுமையான வலி, எரிச்சல், இரத்தப்போக்கு மற்றும் குதப் பகுதியில் அரிப்பு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கலாம். பைல்ஸ் என்பது பலருக்கு ஒரு நாள்பட்ட நோயாக இருக்கும். இதனை கவனிக்காமல் விட்டால் மிகவும் ஆபத்தாக முடியும். மலக்குடல் மற்றும் ஆசனவாயில் உள்ள திசுக்கள் பலவீனமடைவதால், மூல நோய் உருவாகும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
மூல நோய் இரண்டு வகைப்படும், ஒன்று ஆசனவாயின் வெளியே இரத்தம் வராத மருக்கள், மற்றொன்று உள்ளே இரத்தம் கசியும் மருக்கள். மூல நோய்க்கு உடனடியாக சிகிச்சையளிப்பது அவசியம். வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், ஆல்கஹால், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு ஆகியவை இந்த நோய் ஏற்படுவதற்கு மிகப்பெரிய காரணம். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சில உணவுகளை வழக்கமாக எடுத்துக் கொள்வது தீர்வைத் தரும். இவற்றை உட்கொள்வதால் பைல்ஸ் பிரச்சனை குறைகிறது.
சேனைக்கிழங்கு
நீங்கள் மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உங்கள் நோய் நாள்பட்டதாக இருந்தால், அதைதிலிருந்து விரைவாக விடுதலை பெற சேனைக்கிழங்கு சாப்பிட வேண்டும். சந்தையில் எளிதாக கிடைக்கும் இந்த காய்கறியை வாரத்திற்கு மூன்று முறை நெய்யில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
மூலநோய்க்கு அருமருந்தாகும் மோர்
கோடை காலம் தொடங்கிவிட்டது, அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மோர் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாட்டையும் பூர்த்தி செய்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் மூல நோயில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
பாலில் நெய் கலந்து குடிக்கவும்
பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் பசு நெய் கலந்து குடிக்க வேண்டும். மலசிக்கலை நீக்க இது உங்களுக்கு உதவும்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்
மலச்சிக்கலுக்கு தண்ணீர் அருந்தாததே பெரிய காரணம். தண்ணீர் குடிப்பது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. நாள் முழுவதும் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்.
இரவு உணவு
இரவில் இறைச்சி அல்லது மற்ற செரிக்க கடினமான உணவுகளை உண்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த பழக்கத்தை மாற்றவும். உண்மையில் இந்த பழக்கம் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், உணவு முற்றிலும் லைட்டான உணவாக இருக்க வேண்டும். இது தவிர, மூல நோயின்வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, நீங்கள் தினமும் 10 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் உட்காரலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | இதய தமனிகளில் படிந்துள்ள கொலஸ்டிராலை கரைக்கும் ‘சில’ ஊற வைத்த உலர் பழங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ